அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Worker's Day



தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்பட ...


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று சொன்னார்கள் நம் முன்னோர். என்று மனிதன் உழைக்க கற்றுக் கொண்டானோ அன்று தான் அவன் வளரவும் கற்றுக்கொண்டான். தொடக்கத்தில் கடவுள் மனிதனை படைத்து ஏதேன் தோட்டத்தின் நிலத்தை பண்படுத்தவும் பாதுகாக்கவுமே படைத்தார். எனவே படைப்பின் முதல் மனிதனே ஒரு தொழிலாளி தான். 

தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தின் விளைவு தான் இந்த மே 1 ஆம் தியதி. நமது நாட்டின் அனைத்து தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்படவும்  ஏற்றத்தாழ்வுகள் களையப்படவும், தொழிலாளர் மாண்பு மதிக்கப்படவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவும் தொழிலாளர்கள் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நமது வளர்ச்சிக்கும் சமூக நீதிக்கும் குரல் கொடுக்க முன்வருவோம்.