அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

புத்தாண்டில் டாப் 10 எதிர்பார்ப்புகள்.. HAPPY NEW YEAR


புத்தாண்டில் டாப் 10 எதிர்பார்ப்புகள்


1. லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஊழல் அற்ற தேசம் மலர வேண்டும்.

2. கூடன்குளம் ஆணு மின்நிலையம் மூடப்படவேண்டும்.

3. முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட மாட்டாது என்ற செய்தி வெளியாக வேண்டும்.

4. தமிழ்நாட்டில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். 

5. தமிழக மீனவர்கள் இலங்கை படைவீரர்களால் தாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

6. அறிவியல் புரட்சிகள் அரங்கேர வேண்டும்.

7. விவசாயிகள் எழுச்சிக் கொள்ள வேண்டும்.

8. விலைவாசி குறைய வேண்டும்.

9. அடிமை ஜாதிய அடக்குமுறை மறையவேண்டும்.

10. மதக்கலவரங்கள் மறையவேண்டும்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..


முல்லைபெரியார், சில ஆதங்கங்கள்...


முல்லைப்பெரியார் அணை தொடர்பாக கேளர அரசை கண்டித்து பல்வேறு பட்ட போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

தமிழக அரசு எடுக்கும் திட்டங்களும் தீர்மானங்களும் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றே கருதப்படுகின்றன. இச்சூழலில் தழிழர்கள் முல்லைப் பெரியார் அணைக்காக போராட களம் காணும் போது தமிழக அரசே அவர்களை போலீஸ் துணையோடு அடித்து துன்புறுத்துவதும் போராட்டத்தை ஒடுக்க நினைப்பதும் வேதனையையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது.

தமிழக அரசும் மக்கள் சார்பாக களம் காண வேண்டும். கேரள அரசின் போக்கை கண்டித்து எல்லா முறைகளிலும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

சில ஆதங்கங்கள்...

1. தமிழர்கள் கேளராவில் தாக்கப்படுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தில் கேரளர்கள் தாக்கப்படக்கூடாது.

2. எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழர்கள் அல்லது அரசின் பொருட்கள் நாசப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

3. கேரள வணிகர்கள் தாக்கப்படுவதும் அவர்களின் கடைகள் உடைத்து எரியப்படுவதும் தொடர்ந்தது என்றால் வட மாநிலங்களிலும் இதர மாநிலங்களிலும் தமிழர்களும் அவர்களின் கடைகளும் தாக்கப்படுவது சரி என்றாகி விடும்.

4. பால் தாக்ரே மும்பையில் மும்பையர்களை தவிர வேறு யாரும் கடையோ வாணிபமோ செய்யக்கூடாது என்று சொல்வதை போல கேரளர்களை துரத்துவதன் மூலமாக நாமும் அவர் தத்துவத்தை கையாளுகின்றோம் என்று பொருள் படும்.

5. அற வழியில் பேச்சுவார்த்தையின் அடிப்பைடயில் நம் உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதே நம் தமிழ் பாரம்பரியமும் பண்பாடும் மனிதமும் ஆகும்

'எலைட் மதுப்பான கடை' இளையதலைமுறையே ....நில்லாதே...ஓடிவிடு......




சென்னை போன்ற பெரும் நகரங்கள் வேலை வாய்ப்புகளை பெரும் அளவில் தரும் இடங்கள். பல கிராமங்களிலிருந்து கணிணி பொறியாளர்கள் என்றும் வியபாரிகள் என்றும்  பணிக்காக பல கனவுகளுடன் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுக்கின்றனர். கனவுகளோடு வந்தவர்களை வாழ வைக்க வேண்டிய அரசு இன்று பெரும்; இளைஞர்களை குறிவைத்து தாக்குகின்றது. ஆடம்பர கேளிக்கை மதுப்பான கடை என்ற பெயரில் படித்த இளைய தலைமுறையினரை குடிகாரராக மாற்றுவதோடு நில்லாமல் அவர்களின் கனவுகளையும் தகர்த்து போடுகின்றது.

ஏற்கெனவே பல பணி பளுவோடு வேலைச்செய்கின்ற இளைஞர்கள் இரவில் ஓய்வு எடுப்பதை விட்டுவிட்டு தங்கள் நண்பர்களோடு கேளிக்கையில் ஈடுபடுவதை காணமுடிகின்றது. இதனால் பெரும் உடல்நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகுகின்றார்கள்.

இளையதலைமுறையினரை நடமாடும் மனநோயாளிகளாக மாற்றியது யார்?
சம்மாதிப்பதை குடித்தே அழித்து விடு என்று தூண்டுவது யார்?
அரசு நம்மை வாழச்செய்கிறதா? வீழ்த்தப்பார்க்கின்றதா?

Tasmac என்றப்பெயரில் பாமரர்களின் பகுத்தறிவாற்றலை கெடுத்தீர்கள். Elite என்ற பெயரால் அறிஞர்களே இல்லாமல் செய்தீர்.  

அணையும் அரசியலும் - கொஞ்சம் யோசிங்கப்பா...




முல்லைப்பெரியார் அணை தொடர்பாக பல ஆண்டுக்காலமாகவே இரு மாநிலங்களுக்கு இடையே இழுப்பறி நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இச்சூழலில இந்த பிரச்சினை இப்போது வெடிக்க காரணம் என்ன? கொஞ்சம் யோசிங்கப்பா....இது தான் அரசியல் விளையாட்டு என்றுச் சொல்வது.

 கூடன்குளம் பிரச்சினை தமிழகத்தில் ஒரு தாக்கத்தையும் இந்திய அளவில் பல மாநிலங்களின் அணுஉலைப்பற்றிய சிந்தனையையும் மாற்றியமைத்தது. இதனால் அதிர்ந்து இல்லை இல்லை அரண்டு தான் போனது மத்திய அரசு. இதனால் பல கோடிகள் கைபுரளும் சூழல் தடைப்படும் என்பதை அறிந்த மத்திய அரசு கொளுத்திப்போட்ட தீக்குச்சி தான் முல்லைப் பெரியார் அணைத் தொடர்புடைய பிரச்சினை. இன்று மாநிலங்களுக்கு இடையேயான குடும்ப உறவை முறித்து விட்டு குளிர் காய்கிறது. குளிர் காலத்தில் டெல்லிக்கு இது தேவைத்தான்.

இன்று இது இந்திய ஒருமைப்பாட்டிற்கே பங்கம் விளைவிக்கும் தன்மையில் பற்றி எரிகின்றது.

இதனால் கூடன்குளம் எதிர்ப்பு வலுவிழந்து விட்டது என்ற தோற்றத்தை அனைத்து ஊடகங்களும் ஊதுகின்றன. 

காங்கிரசு அரசு ஏன் முல்லைப் பெரியார் பிரச்சினையை கிளப்ப வேண்டும்?


கேரள அரசு, "முல்லைப் பெரியார் அணை பழமையானது நிலநடுக்கம் வந்தால் இடிந்து போகும். பெரும் ஆபத்து வரும்'.


தமிழக அரசு, "முல்லை பெரியார் அணை பாதுகாப்பாகத்தான் இருக்கின்றது".


அணு எதிர்ப்பாளர்கள் "கூடன்குளத்தில் அமைந்திருக்கின்ற அணுஉலை சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்ற இடர்பாடுகளால் தாக்கப்பட்டு பெறும் ஆபத்தை விளைவிக்கும்".

இந்திய அரசு, "அணுஉலை மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றது".

இப்படியாக அணுஉலை பாதுகாப்பும் முல்லைப்பெரியார் அணை பாதுகாப்பும் தொடர்புபடுத்தப்பட்டு, நீங்கள் (தமிழர்கள்) "அணை பாதுகாப்பாக இருக்கின்றது" என்கின்றீர்கள். ஆனால் "அணு உலையும் பாதுகாப்பாக இருக்கின்றது" என்று  நாங்கள் சொன்னால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கின்றீர்கள்" என்று மறைமுகமாக கேள்விகளை எழுப்புகின்றது.

கொஞ்சம் யோசிங்கப்பா....

காங்கிரசு அரசின் கில்லாடி தனத்திற்கு நீங்க எத்தனை மதிப்பெண் போடுவீங்க?