அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

முல்லைபெரியார், சில ஆதங்கங்கள்...


முல்லைப்பெரியார் அணை தொடர்பாக கேளர அரசை கண்டித்து பல்வேறு பட்ட போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

தமிழக அரசு எடுக்கும் திட்டங்களும் தீர்மானங்களும் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றே கருதப்படுகின்றன. இச்சூழலில் தழிழர்கள் முல்லைப் பெரியார் அணைக்காக போராட களம் காணும் போது தமிழக அரசே அவர்களை போலீஸ் துணையோடு அடித்து துன்புறுத்துவதும் போராட்டத்தை ஒடுக்க நினைப்பதும் வேதனையையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது.

தமிழக அரசும் மக்கள் சார்பாக களம் காண வேண்டும். கேரள அரசின் போக்கை கண்டித்து எல்லா முறைகளிலும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

சில ஆதங்கங்கள்...

1. தமிழர்கள் கேளராவில் தாக்கப்படுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தில் கேரளர்கள் தாக்கப்படக்கூடாது.

2. எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழர்கள் அல்லது அரசின் பொருட்கள் நாசப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

3. கேரள வணிகர்கள் தாக்கப்படுவதும் அவர்களின் கடைகள் உடைத்து எரியப்படுவதும் தொடர்ந்தது என்றால் வட மாநிலங்களிலும் இதர மாநிலங்களிலும் தமிழர்களும் அவர்களின் கடைகளும் தாக்கப்படுவது சரி என்றாகி விடும்.

4. பால் தாக்ரே மும்பையில் மும்பையர்களை தவிர வேறு யாரும் கடையோ வாணிபமோ செய்யக்கூடாது என்று சொல்வதை போல கேரளர்களை துரத்துவதன் மூலமாக நாமும் அவர் தத்துவத்தை கையாளுகின்றோம் என்று பொருள் படும்.

5. அற வழியில் பேச்சுவார்த்தையின் அடிப்பைடயில் நம் உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதே நம் தமிழ் பாரம்பரியமும் பண்பாடும் மனிதமும் ஆகும்