சென்னை போன்ற பெரும் நகரங்கள் வேலை வாய்ப்புகளை பெரும் அளவில் தரும் இடங்கள். பல கிராமங்களிலிருந்து கணிணி பொறியாளர்கள் என்றும் வியபாரிகள் என்றும் பணிக்காக பல கனவுகளுடன் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுக்கின்றனர். கனவுகளோடு வந்தவர்களை வாழ வைக்க வேண்டிய அரசு இன்று பெரும்; இளைஞர்களை குறிவைத்து தாக்குகின்றது. ஆடம்பர கேளிக்கை மதுப்பான கடை என்ற பெயரில் படித்த இளைய தலைமுறையினரை குடிகாரராக மாற்றுவதோடு நில்லாமல் அவர்களின் கனவுகளையும் தகர்த்து போடுகின்றது.
ஏற்கெனவே பல பணி பளுவோடு வேலைச்செய்கின்ற இளைஞர்கள் இரவில் ஓய்வு எடுப்பதை விட்டுவிட்டு தங்கள் நண்பர்களோடு கேளிக்கையில் ஈடுபடுவதை காணமுடிகின்றது. இதனால் பெரும் உடல்நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகுகின்றார்கள்.
இளையதலைமுறையினரை நடமாடும் மனநோயாளிகளாக மாற்றியது யார்?
சம்மாதிப்பதை குடித்தே அழித்து விடு என்று தூண்டுவது யார்?
அரசு நம்மை வாழச்செய்கிறதா? வீழ்த்தப்பார்க்கின்றதா?
Tasmac என்றப்பெயரில் பாமரர்களின் பகுத்தறிவாற்றலை கெடுத்தீர்கள். Elite என்ற பெயரால் அறிஞர்களே இல்லாமல் செய்தீர்.