முயற்சி திருவினையாக்கும்
'முயற்சி திருவினையாக்கும்' என்பது பழமொழி. கொஞ்சம் பயிற்சியும் கொஞ்சம் முயற்சியும் இருந்தாலே பல சாதனைகளை படைக்கமுடியும் என்பர் பெரியோர். வாழ்க்கையில் பலர், ' பல செயல்கள் செய்தாலும் என்னால் வெற்றிப்பெற முடியவில்லையே' என கவலையில் முனங்கிக் கொண்டிருப்பதை நாம் கேட்டிருக்கின்றோம். வெற்றிப் பெற்ற சாதனை மனிதர்கள் நமக்கு சொல்லும் மந்திரம் ஒன்றே. அதுவே 'முயற்சி'.
'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை'. மாவீரன் அலெக்சாண்டர் போர்முனையில் தோல்விகண்டப்போது மீண்டும் அவனை உற்ச்சாகப்படுத்தியது அவர் கண்முன்னே கண்ட காட்சி. சிலந்தி ஒன்று பல போராட்டங்களுக்கும் தோல்விகளுக்கும் மத்தியில் வெற்றிக்கரகான சிலந்திவலையை பின்னி முடித்தது. இந்த காட்சி அலெக்சாண்டரை சிந்திக்க வைத்தது. பின்னர் இதுவே வெற்றியினை மகுடமாக தந்தது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மகிதன் தன் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத பல அறிய கண்டுப்பிடிப்புகளுக்கும் அறிவியல் அதிசயங்களுக்கும் நாம் சொந்தம் கொண்டாடுகின்றோம் என்றால் அது மனிதகுலத்தின் தொடர் முயற்சியின் பயனாக நாம் பெற்றுக் கொண்டவையே ஆகும்.
தன்னுடைய முயற்சியால் முன்னேறியவர்யன் நான் மிகுந்த சிரமப்பட்டு முயற்சித்தேன் இன்று நான் நல்ல நிலையில் இருக்கின்றேன், என் உழைப்பு எனக்கே சொந்தம் என்பார்களானால் அவர்களும் இறையாட்சிக்கு எதிரானவர்களே. ஒவ்வொறு மனிதனும் தன் பெறுகின்ற வெற்றியையும் அதர்கான பரிசினையும் பிறர் வெற்றி பெறுவதற்காக அர்ப்பணித்திடும் போது அதுவே அவன் பெறும் தலைசிறந்த வெற்றியாகும்.
முயற்சியால் முன்னேறியவர்கள் மற்றவரக்கு முட்டக்கட்டையாய் இராமல் பிறர் முன்னேற்றத்திற்காக தங்களையே ஈடுப்படுத்திக் கொள்வதே நான் பெறும் வெற்றியின் சிறப்பாகும்.