அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Reconciliation and Relationship, உறவின் முறிவே பாவம்

உறவின் முறிவே பாவம்

மனிதன் ஒரு சமூக உயிரி. சமூகங்களோடு உறவுக்கொண்டு வாழ்பவன். எழுந்தாலும், வீழ்ந்தாலும், அழுதாலும் சிரித்தாலும் அவன் சமூக கலாச்சார, மொழிச் சூழலின் தாக்கத்தினால் செயல்படவேண்டியிருக்கின்றது. சமூகம் என்ற ஆடை இல்லாத மனிதன் மனிதனாகவே இருக்க முடியாது. இச்சூழலில் மனிதன் சமூகத்தோடு உறவுக் கொள்ள அழைக்கப்படுகின்றான். கிறித்தவத்தில் பாவம் என்பது பலவாறு கூறப்பட்டாலும் சமூகத்தோடு மன்pதன் கொண்டுள்ள உறவின் முறிவே பாவம் என்று நமக்கு வரையறுக்கப்படுகினறது.

சமூகத்தோடு தன் உறவை முறித்துக் கொள்ளும் மனிதன் சமூகம் வெளிப்படுத்தும் கடவுளுடன் உறவுக்கொள்ள முடியாமல் பாவத்தில் உழல்வதை நாம் காண்கின்றோம்.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் நாம் சமூகத்தோடும், கடவுளோடும் கொண்டுள்ள உறவை சிதைப்பதாகவும், சிதைப்பதாகவும் அமையக்கூடும். எனவே தான் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் பிறரை அறிவிலியே, முட்டாளே என்று திட்ட வேண்டாம், ஏனெனில் இதுவே நம்மை ஒப்புரவிற்கு எதிரானவர்களாகவும, பெறும் தவறுச் செய்ய காரணமானவர்களாகவும் விழச்செய்யும் என்று இயேசு எச்சரிக்கின்றார்.

தன்னைத்தானே பிறருக்காக, கடவுளுக்காக தற்கையளிப்புச் செய்வதே காணிக்கையும் உயர்ந்த அர்ப்பணமும் ஆகும். நாம் எவரிடமும் உறவு முறிவுக் கொண்டிருந்தால் உடனே அவர்களுடனான உறவை புதுப்பித்துக்கொண்டு அவர்களுக்கு நம்மையே கையளிப்பதே உயர்ந்த காணிக்கையாகும் என்பதனையும் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.