அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Happiness, மகிழ்ச்சி

மகிழ்ச்சி



மனித வாழ்வில் அனைவரும் அடைய விரும்;புவது மகிழ்ச்சி. மகிழ்ச்சி என்ற இந்த உணர்வு நிலையை அடையத்தான் மனிதன் பல திசைகளை நோக்கி ஓடுகின்றான். 'மகிழ்ச்சி' எங்கு என்ன விலையில் கிடைக்கி;ன்றது என்ற ரீதியில் பணம் கொடுத்து வாங்க நினைக்கின்றான்.



பெர்னாட்ஷா சொல்கிறார், 'பணத்தை மட்டும் சேர்த்துக் கொள். உலகம் முழுவதும் சேர்ந்து கொண்டு உன்னை ஒரு பண்பாளன் என்று கூறத் தயங்காது'. எனவே தான் மனிதன் அதிகமாக சம்பாதிக்க துணிகின்றான்.



பணம் விலையுயர்ந்த கட்டில்களை வாங்கித்தரும் தூக்கத்தை வாங்கித் தருவதில்லை. விதவிதமாக உணவு பதார்த்தத்தை வாங்கித்தரும் அதனை உண்ண பசியை வாங்கித் தருவதில்லை.



சில நேரங்களில் பணம் மகிழ்ச்சியடைய மகிழ்ச்சி நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு பாதையாக இருக்கக்கூடும். ஆனால் அதுவே தான் பயண எல்லை என்று நினைப்பவனின் வாழ்க்கை தேனிலே விழுந்து இறந்துப் போகும் தேனீயின் வாழ்க்கைப்போல் அமையும்.



பணம் இருந்தாலும் இல்லை என்றாலும், மனித வாழ்வில் துன்பங்களைப் போல மகிழ்ச்சியும் உண்டு.



சவால்களை, துன்பங்களை எதிர்க்கொண்டு அதனி;ல் மின்னும் மகிழ்ச்சிகளை மட்டுமே தன் வாழ்க்கை பையில் சேகரித்து சேமித்து வைப்பவனே உலகில் மிகவும் மகிழ்ச்சியான மனிதன்.



சிறு கற்களை தன் கண்முன்னால் வைத்து பார்த்து பார்வை அடைப்பட்டு வாழ்வு விக்கி மடிவதைவிட, வாழ்க்கையில் பெரிய தடைக்கற்களை கூட பார்வைக்கு தூரமாக வைத்துப் பார்க்கும் போது பெரிய பெரிய தடை கற்களும் நம் கையில் தவழும் வைர வைடூரியங்களே.