அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Love is expensive, விலையேறும் அன்பு

விலையேறும் அன்பு


            உலகம் வளர்கின்றது. நாகரிகம் மாறுகின்றது. விலைவாசி ஏறுகின்றது. மாறிவருகின்ற இச்சூழலில் அன்பும் விலையேறுகின்றது. ஒருவரை அன்புச்செய்கின்றோம் என்றுச் சொன்னால் அதனை ஏதாவது வகையில் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

அன்பு விலைபேசப்படுகின்ற சூழலில் நாம் பரிசளிக்கும் பொருளின் மதிப்பிலிருந்தே நாம் அதிகமாக அன்புச்செய்கின்றோமா இல்லையா என தீர்மானிக்கப்படுகின்றது.

கணவன் விலை உயர்ந்த புடவையை மனைவிக்கு வாங்கி தந்தால் தான் தன்னை கணவன் அதிகமாக அன்புச் செய்கின்றார் என்று மனைவி புரிந்துக்கொள்கின்றாள். பிள்ளைகள் தாங்கள் கேட்டதை பெற்றோர் உடனேயே வாங்கி கொடுத்தால்; பெற்றோர் தங்களை அன்புச் செய்கின்றனர் என உணர்கின்றனர். இதனால் பணம் படைத்தவர்களால் மட்டுமே அன்புச் செய்ய முடியும் என்ற சூழ்நிலை உருவாவதை காண முடிகின்றது.

ஏழைகள் அன்புச் செய்ய அருகதையற்றவர்களா? அவர்களால் அன்பு செய்யவே முடியாதா? உண்மை அன்பு என்றால் என்ன? என பல கேள்விகள் மனதில் உருத்துவதை காண முடிகின்றது.

வளர்ந்து வரும் நாகரிக உலகில் பொருட்களின் விலைவாசி உயர உயர அன்பும் விலையேரத்தான் செய்கின்றது. பணம் படைத்தவரால் மட்டுமே அன்பு செய்ய முடியும் என்ற நிலையும் ஏற்படுகின்றது. இதற்கு யார் பொறுப்பேர்ப்பது.