படைக்கப்படும் கடவுள்
கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளைப் படைக்கின்றான். ஒவ்வொறுவரும் தன் விருப்பத்திற்கு, தான் விரும்பிய கருத்தியலுக்கு, வாழ்க்கை முறைக்கு, கலாச்சாரச் சூழலுக்கு ஏற்ப கடவுளை படைக்கின்றனர். தொடக்கத்தில் மக்கள் கடவுளைப்பற்றி கொண்டிருந்த எண்ணத்திற்கும் இன்று நாம் கொண்டிருக்கும் எண்ணத்திற்கும் வேறுபாடு பல இருக்கின்றது தானே? ஒவ்வொறு காலக்கட்டத்திலும் கடவுள் புதிதாக படைக்கப்படுகின்றார். இப்படியாக படைக்கப்பட்ட கடவுள் தினம் தினம் பரிணமிக்கின்றார். இத்தகையச் சூழ்நிலையில் இன்று நமக்கு உண்மை கடவுள் யார்? இக் கேள்விகளுக்கு நான் விளக்கம் கொடுக்க முயன்றால் மீண்டுமாக நான் எனது சிந்தனைகளுக்கு, வாழ்க்கை அனுபவத்திற்கேற்ப புதிய கடவுள் ஒருவரை படைக்க விளைகின்றேன் என்றே பொருள் படும்.