அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

நீ உன்னை அறிவாய், Know yourself

'நீ உன்னை அறிவாய்'




'அட்சய பாத்திரம் இருக்கும் இடத்தில் பிச்சைப் பாத்திரம் எதற்கு?'



சாக்கிரட்டீஸ், 'நீ உன்னை அறிவாய்' என்கின்றார். ஒருவன் தன்னை அறியும்போது உயர்கின்றான்.



'பிச்சைக்காரன் ஒருவன் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் ஒரு கல்லின்மேல் அமர்ந்து கொண்டு பிச்சை எடுத்து பிழைத்து வந்தான். இவ்வாறு பல ஆண்டுகள் கழித்து அவன் இறந்த பிறகு அவன் அமர்ந்திருந்த கல் சாலை அமைக்கும் பணியாளர்களால் புரட்டப்பட்டபோது கல்லின் கீழே விலை மதிப்பற்ற வைர கற்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பாவம், பிச்சைக்காரன் தனக்கு கீழேயே பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் இருந்ததை உணராமல் ஆண்டாண்டு காலம் பிச்சை எடுத்தே பரிதாப நிலையில் வாழ்ந்திருக்கிறான்.



இந்தப் பிச்சைக்காரனைப் போல் தான் பலரும் தனக்கும் இருக்கும் திறமைகளை, மதிப்பீடுகளை, கருத்துக் கருவூலங்களை தனக்குள்ளேயே குழித்தோண்டி புதைத்துவிட்டு அதன்மேல் அமர்ந்து அடைகாக்கின்றார்கள். அட்சய பாத்திரத்திற்கு உரிமையாளர்களாய் இருந்தாலும் பிச்சைப்பாத்திரம் ஏந்தவே விரும்புகின்றனர்.



'நீ உன்னை அறிவாய், உலகம் உன்னை அறியும்'