அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Politics in the market, அரசியல் விற்பனைக்கு

அரசியல் விற்பனைக்கு

இலவசக் கலாச்சாரம் மனித வாணிபத்தை, சந்தைப்பொருள் விற்பனையை அதிகப்படுத்துகின்றது. வாணிபத்தில் தொடங்கிய இந்த இலவச கலாச்சாரம் இன்று அரசியலிலும் புகுந்து விட்டதை நாம் பார்க்க முடிகின்றது.

ஒரு பொருள் வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என்பது போல இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் கைநிறைய காசு, வேஸ்டிச் சேலை இலவசம் என்று ஒருப்பக்கம் முழங்க இன்னொறுப் பக்கம் பருப்பு இலவசம், அரிசி என்;று இலவசங்களில் சமூகம் கிரங்கிக்கிடக்கின்றது.

மனித உற்ப்பத்திக்கு இலவசம் என்பதை நாம் சகித்துக் கொண்டாலும் மனித உரிமைக்கு விலைக்கொடுக்கும் இந்த அரசியல் முதலைகளை, பகுத்தாயும்

பகுத்தறிவினை மழுங்கடிக்கச் செய்கின்ற அரசியல் திமிரை என்னவென்றுச் சொல்வது.

உடலை விற்பவரை வபச்சாரி என்கின்றோன். உரிமையை விற்ப்பவரை என்ன பெயரில் அழைப்பது. பொருட்களை வாங்குவோரை நுகர்வோர் என்கின்றோம். உரிமையை வாங்குவோரை என்னவென்று அழைப்பது.

வாழ்த்துக்கள்! வியபாரம் தொடரட்டும்! நுகர்வோர் சமூகம் வளரட்டும்!