அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Money, சக்கரம்

சக்கரம்

        தமிழில் பணத்தை பல பெயர் சொல்லி அழைப்பதுண்டு, நாணயம், துட்டு, காசு, சக்கரம் இப்படி பல. இதில் எனக்கு பிடித்த பெயர் 'சக்கரம்'. இதற்கு காரணம் உண்டு.
பூமி சுழலும் தன்மை கொண்டிருக்கின்றது. சுழற்சியே உயிர் இயக்கத்தையும் கால மாற்றத்தையும் கொண்டு வருகின்றது. சுழற்சி நிற்குமேயானால் உலகம் உயிரில்லாமல் பொய்த்துவிட வாய்ப்பு உண்டு.
பண்டைய மனிதனிடம் பண்டமாற்று முறை உண்டு. தன்னிடம் மிகுதியாய் இருப்பவற்றை பிறருக்கு கொடுத்து தன்னிடம் இல்லாத பொருட்களை வாங்கிக் கொள்வான். இதனால் தேவையின் அடிப்படையில் பொருட்சுழற்சி உண்டாயிற்று, இதனால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
உலகில் இன்று மனிதர்களிடையே இந்த சுழற்சி முறை தேக்கநிலை பெற்றுள்ளது. மனிதன் தன் சுயநல சிந்தனையினால் செல்வங்களை, சொத்துக்களை சுரண்டி, பதுக்கி வைத்ததினாலேயே, மூன்றாம் உலக நாடுகள் என்ற நிலை முளைத்தெழ காரணமாயிற்று. இன்று இந்தியாவில் 20 சதவீத மக்கள் 80 சதவீத சொத்தினை அனுபவிக்கும் நிலையும் 80 சதவீத செல்வத்தினை மக்கள் வெறும் 20 சதவீத செல்வத்தினை அனுபவிக்கும் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக படிநிலையும் உருவாகியிருக்கின்றன.
பலரின் உரிமைகளும், உயிர் வாழ்வதற்கான ஆதாரமும் சுரண்டப்பட்டு பணமாக மாற்றப்பட்டு இன்று பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால வறுமை கோடுகள் ஏற்படுகின்றன.

பணத்திற்கு 'சக்கரம்' என்ற பெயர் ஒன்று குமரிமாவட்டத்தில் உண்டு. சக்கரம் எப்படி சுழல்கின்றதோ அதே போன்று காசும் சக்கரமாய் ஒருவர் மற்றவர்களிடம் சுழல விட வேண்டும். நாட்டின் பொருளாதாரமே இந்த சூத்திரத்தில்தான் அடங்கியுள்ளது.

பணம் சக்கரமாய் ஒருவர் மற்றவரிடம் சுழலும்போது, வர்த்தகம் சூடு பிடிக்கின்றது. லாபம் பெருகுகின்றது. வாழ்க்கைத் தரம் உயர்கின்றது. ஏழை பணக்காரர் இடைவெளி குறைகின்றது.

செல்வத்தை பதுக்கும்போது அது கருப்புப் பணம். செல்வத்தை சக்கரமாக்கும்போது, சுழலவிடும்போது அது பகிர்ந்தளிக்கப்பட்ட பணம்.
'சுழற்சியிலிருக்கும்போது தான் வளர்ச்சி இருக்கும்.