இயற்கையில் இறைவன்
இயற்கையில் இறைவனைக் காண முடியும் என்பது பெறும்பாலான மக்களின் நம்பிக்கை. இன்று இறைவன் பெயரில் இயற்கையை அழிப்பது நாடறிந்த உண்மை. அறிவியலும் நாகரிகமும் நமக்கு கொடுத்த பெறும் கொடை அம்மணமும் அவமானமுமே. பசுமை உடுத்திய இயற்கை இன்று நிர்வாணம் உடுத்தி நிற்கும் அவலம் கண்டு மனம் கசிகின்றது. இறைவன் இன்று தன்னை இயற்கையை தவர வேறு விதத்தில் தன்னை வெளிப்படுத்த முடியாது. இறைவனின் நன்மைதனம் முழுமையாக இயற்கையில் தான் பிரதிபலிக்கின்றது. இன்று இயற்கை அழிக்கப்படுவதால் அத்தோடு இறைவனின் பிரதிபலிப்பும் அழிக்கப்படுகின்றது.
ஒவ்வொறு சமயமும் ஒவ்வொறு அடையாளங்கள் வழியாக கடவுளை வழிப்படுகின்றன. தண்ணீர், அப்பம், ஒளி, மரம், மலை போன்ற இயற்கை அடையாளங்களையே இறையனுபவத்திற்கான கருவிகளாக பயன்படுத்துகின்றன. எனவே இத்தகைய இயற்கை சார்ந்த அடையாளங்கள் மாசுப்பட்டிருந்தால் தூய்மையான இறைவனை இவைகள் மூலமாக அனுபவிப்பது என்பது மிக சிரமமான ஒன்றாகும்.
இயற்கை மாசுப்படும் போது இறைவனின் வெளிப்பாடும் மாசுப்படுகினறது. கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் பாவம் கழுவப்படுகின்றது எனும் நம்பிக்கையில் உள்ள மக்கள் தண்ணீரை மாசடையச் செய்வதேன்? தூய்மையற்ற ஆறுகள், தண்ணீர் தேக்கங்கள் தூய்மையுள்ளக் இறைவனின் உண்மை வெளிப்படாக இருக்கமுடியாது.