அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

புத்தாண்டில் டாப் 10 எதிர்பார்ப்புகள்.. HAPPY NEW YEAR


புத்தாண்டில் டாப் 10 எதிர்பார்ப்புகள்


1. லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஊழல் அற்ற தேசம் மலர வேண்டும்.

2. கூடன்குளம் ஆணு மின்நிலையம் மூடப்படவேண்டும்.

3. முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட மாட்டாது என்ற செய்தி வெளியாக வேண்டும்.

4. தமிழ்நாட்டில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். 

5. தமிழக மீனவர்கள் இலங்கை படைவீரர்களால் தாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

6. அறிவியல் புரட்சிகள் அரங்கேர வேண்டும்.

7. விவசாயிகள் எழுச்சிக் கொள்ள வேண்டும்.

8. விலைவாசி குறைய வேண்டும்.

9. அடிமை ஜாதிய அடக்குமுறை மறையவேண்டும்.

10. மதக்கலவரங்கள் மறையவேண்டும்.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..


முல்லைபெரியார், சில ஆதங்கங்கள்...


முல்லைப்பெரியார் அணை தொடர்பாக கேளர அரசை கண்டித்து பல்வேறு பட்ட போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

தமிழக அரசு எடுக்கும் திட்டங்களும் தீர்மானங்களும் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றே கருதப்படுகின்றன. இச்சூழலில் தழிழர்கள் முல்லைப் பெரியார் அணைக்காக போராட களம் காணும் போது தமிழக அரசே அவர்களை போலீஸ் துணையோடு அடித்து துன்புறுத்துவதும் போராட்டத்தை ஒடுக்க நினைப்பதும் வேதனையையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது.

தமிழக அரசும் மக்கள் சார்பாக களம் காண வேண்டும். கேரள அரசின் போக்கை கண்டித்து எல்லா முறைகளிலும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

சில ஆதங்கங்கள்...

1. தமிழர்கள் கேளராவில் தாக்கப்படுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தில் கேரளர்கள் தாக்கப்படக்கூடாது.

2. எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழர்கள் அல்லது அரசின் பொருட்கள் நாசப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

3. கேரள வணிகர்கள் தாக்கப்படுவதும் அவர்களின் கடைகள் உடைத்து எரியப்படுவதும் தொடர்ந்தது என்றால் வட மாநிலங்களிலும் இதர மாநிலங்களிலும் தமிழர்களும் அவர்களின் கடைகளும் தாக்கப்படுவது சரி என்றாகி விடும்.

4. பால் தாக்ரே மும்பையில் மும்பையர்களை தவிர வேறு யாரும் கடையோ வாணிபமோ செய்யக்கூடாது என்று சொல்வதை போல கேரளர்களை துரத்துவதன் மூலமாக நாமும் அவர் தத்துவத்தை கையாளுகின்றோம் என்று பொருள் படும்.

5. அற வழியில் பேச்சுவார்த்தையின் அடிப்பைடயில் நம் உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதே நம் தமிழ் பாரம்பரியமும் பண்பாடும் மனிதமும் ஆகும்

'எலைட் மதுப்பான கடை' இளையதலைமுறையே ....நில்லாதே...ஓடிவிடு......




சென்னை போன்ற பெரும் நகரங்கள் வேலை வாய்ப்புகளை பெரும் அளவில் தரும் இடங்கள். பல கிராமங்களிலிருந்து கணிணி பொறியாளர்கள் என்றும் வியபாரிகள் என்றும்  பணிக்காக பல கனவுகளுடன் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுக்கின்றனர். கனவுகளோடு வந்தவர்களை வாழ வைக்க வேண்டிய அரசு இன்று பெரும்; இளைஞர்களை குறிவைத்து தாக்குகின்றது. ஆடம்பர கேளிக்கை மதுப்பான கடை என்ற பெயரில் படித்த இளைய தலைமுறையினரை குடிகாரராக மாற்றுவதோடு நில்லாமல் அவர்களின் கனவுகளையும் தகர்த்து போடுகின்றது.

ஏற்கெனவே பல பணி பளுவோடு வேலைச்செய்கின்ற இளைஞர்கள் இரவில் ஓய்வு எடுப்பதை விட்டுவிட்டு தங்கள் நண்பர்களோடு கேளிக்கையில் ஈடுபடுவதை காணமுடிகின்றது. இதனால் பெரும் உடல்நோய்க்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகுகின்றார்கள்.

இளையதலைமுறையினரை நடமாடும் மனநோயாளிகளாக மாற்றியது யார்?
சம்மாதிப்பதை குடித்தே அழித்து விடு என்று தூண்டுவது யார்?
அரசு நம்மை வாழச்செய்கிறதா? வீழ்த்தப்பார்க்கின்றதா?

Tasmac என்றப்பெயரில் பாமரர்களின் பகுத்தறிவாற்றலை கெடுத்தீர்கள். Elite என்ற பெயரால் அறிஞர்களே இல்லாமல் செய்தீர்.  

அணையும் அரசியலும் - கொஞ்சம் யோசிங்கப்பா...




முல்லைப்பெரியார் அணை தொடர்பாக பல ஆண்டுக்காலமாகவே இரு மாநிலங்களுக்கு இடையே இழுப்பறி நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இச்சூழலில இந்த பிரச்சினை இப்போது வெடிக்க காரணம் என்ன? கொஞ்சம் யோசிங்கப்பா....இது தான் அரசியல் விளையாட்டு என்றுச் சொல்வது.

 கூடன்குளம் பிரச்சினை தமிழகத்தில் ஒரு தாக்கத்தையும் இந்திய அளவில் பல மாநிலங்களின் அணுஉலைப்பற்றிய சிந்தனையையும் மாற்றியமைத்தது. இதனால் அதிர்ந்து இல்லை இல்லை அரண்டு தான் போனது மத்திய அரசு. இதனால் பல கோடிகள் கைபுரளும் சூழல் தடைப்படும் என்பதை அறிந்த மத்திய அரசு கொளுத்திப்போட்ட தீக்குச்சி தான் முல்லைப் பெரியார் அணைத் தொடர்புடைய பிரச்சினை. இன்று மாநிலங்களுக்கு இடையேயான குடும்ப உறவை முறித்து விட்டு குளிர் காய்கிறது. குளிர் காலத்தில் டெல்லிக்கு இது தேவைத்தான்.

இன்று இது இந்திய ஒருமைப்பாட்டிற்கே பங்கம் விளைவிக்கும் தன்மையில் பற்றி எரிகின்றது.

இதனால் கூடன்குளம் எதிர்ப்பு வலுவிழந்து விட்டது என்ற தோற்றத்தை அனைத்து ஊடகங்களும் ஊதுகின்றன. 

காங்கிரசு அரசு ஏன் முல்லைப் பெரியார் பிரச்சினையை கிளப்ப வேண்டும்?


கேரள அரசு, "முல்லைப் பெரியார் அணை பழமையானது நிலநடுக்கம் வந்தால் இடிந்து போகும். பெரும் ஆபத்து வரும்'.


தமிழக அரசு, "முல்லை பெரியார் அணை பாதுகாப்பாகத்தான் இருக்கின்றது".


அணு எதிர்ப்பாளர்கள் "கூடன்குளத்தில் அமைந்திருக்கின்ற அணுஉலை சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்ற இடர்பாடுகளால் தாக்கப்பட்டு பெறும் ஆபத்தை விளைவிக்கும்".

இந்திய அரசு, "அணுஉலை மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றது".

இப்படியாக அணுஉலை பாதுகாப்பும் முல்லைப்பெரியார் அணை பாதுகாப்பும் தொடர்புபடுத்தப்பட்டு, நீங்கள் (தமிழர்கள்) "அணை பாதுகாப்பாக இருக்கின்றது" என்கின்றீர்கள். ஆனால் "அணு உலையும் பாதுகாப்பாக இருக்கின்றது" என்று  நாங்கள் சொன்னால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கின்றீர்கள்" என்று மறைமுகமாக கேள்விகளை எழுப்புகின்றது.

கொஞ்சம் யோசிங்கப்பா....

காங்கிரசு அரசின் கில்லாடி தனத்திற்கு நீங்க எத்தனை மதிப்பெண் போடுவீங்க?

கூடன்குளம் : ஓர் எச்சரிக்கை

 கூடன்குளம் : ஓர் எச்சரிக்கை

கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் புரட்சியினை அலட்சியம் செய்யும் போக்கினை நாம் வன்மையாக கண்டிப்போம். சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால், கட்சியின் பெயரால் பிரிந்து கிடந்தோமெனில் அழிவுக்கு அடித்தளமாக நாம் இருப்போம்.

இயற்கையினை பகைத்துக்கொண்டு எவராலும்  எதையும் சாதிக்க முடியாது. இயற்கை சக்திகளை குறைத்து மதிப்பிடுபவன் இயற்கையினாலேயே அழிக்கப்படுவான். சப்பான் அணு உலை இயற்கை பேரிடரினால் நிலைக்குலைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியப்போதும் நாம் இன்றும் அந்த பாடத்தை கற்றுக்கொள்ள வில்லை.

வளர்ந்த நாடு சப்பான் ஆனாலும் அதனால் இயற்கைக்கு எதிரான ஒரு அணு உலையினை அமைக்க முடியவில்லை. ஏழைநாடு இந்தியா நாம் இயற்கைக்கு எதிராக நிற்க முடியுமா என்ன?

தமிழினம் காக்கப்பட மக்களின் உயிர் பாதுகாக்கப்பட கூடன் குளம் அணுமின் நிலையம் நமக்கு வேண்டாம். இயற்கையான முறையில் மின்சாரம் கிடைக்கும் வகையில் நீர், காற்று, சூரிய ஒளி போன்ற ஆதாரங்களை பயன்படுத்த அரசை வலியுறுத்துவோம்.

கடின உழைப்பிற்கு...தசரத் மான்ஜி

கடின உழைப்பிற்கு...

பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் கடைநிலை சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். 1959 ஆம் ஆண்டில் தன் 24 ஆம் வயதில் ஒரு நாள்  அவரது அன்பு மனைவி வீட்டிற்கு அருகில் இருந்த மலையின் மறுபுறமிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது தவறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் தசரத் மான்ஜி. இனிமேல் இதேபோன்ற ஒரு அவல நிலை எந்த மனிதனுக்கும் வரக்கூடாது என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்.இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை உண்டுபண்ணுவதே தன் இலட்சியம் எனக் கொண்டார். இதனால் தன் கிராம மக்களுக்கு உதவி செய்யமுடியும் என்று உணர்ந்தார். அவருடைய எண்ணம் எல்லாம் மலையைச் சுற்றியே வட்டமிட்டது. மலையின் குறுக்கே பாதை என்பதுதான் அவருடைய உயிர் மூச்சாக இருந்தது. 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அவரது இலட்சியக் கனல் ஓயவில்லை. 'மலையை உடைக்கப்போகின்றேன்' என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை வரலாறு படைக்கப்போகின்ற மனிதன் என்று யாரும் போற்றவில்லை. மாறாக பைத்தியக்காரன் என்றுதான் பழித்தார்கள். இயலாமையை கண்முன் கொண்;டுவந்தார்கள் மக்கள். பாதையைக் கண் முன் வைத்தார் தசரத். 22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி அந்த பறைக்குள் இருந்த பாதையை வடித்தார் தசரத் என்ற சிற்பி.  அன்று 50 கி.மீ தூரம் மலையைச் சுற்றிக் கொண்டு வந்த 60 கிராமத்தை சார்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில்  நகரத்தை அடைகின்றனர்.

SMART திறனாய்வு

உளவியல் அறிஞர்கள் SMART திறனாய்வு மூலமாக நமக்கு விளக்கிக் கூறுவர். இதனையே நாம் இங்குத் தெளிவாக நோக்குவோம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருதுவாக்கு

1. - S = Specific அறுதியிட்டு குறிப்பிடக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு மைய புள்ளியை நோக்கியதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக 'நான் மேல்படிப்பு படிக்க வேண்டும்' என்று தீர்மானித்தேனென்றால் அது மிகவும் மேலோட்டமாக இருக்கின்றது. நான் என்ன பாடத்தில் மேல் படிப்பு படிக்க விரும்புகின்றேன் என்று அறுதியிட்டுக் குறிப்பிடவில்லை. எனவே குழப்பம் நீடிக்க வாய்ப்பு இருக்கின்றது.

2.  M = Measurable - அளவீட்டுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், உங்கள் இலக்கினுடைய ஆழத்தையும் அகலத்தையும் அதன் அளவையும் சரியாகத் தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானிக்காத விருது வாக்கு ஆழம் தெரியாமல் காலைப் போட்டதற்கு ஒப்பாகும்.

3. A = Attainable (Achievable) - மனித சக்தியால், குறிப்பாக உங்களால் இயலக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும், 'சூரியனைச் சிறைபிடிப்பேன்' என்பன போன்ற தண்ணீரில் எழுதுகின்ற விருது வாக்குகள் வெற்றிபெற்றுத் தரமுடியாது.

4. R = Realistic (Relevant) - உண்மைத்தன்மையுள்ளதாய், தொடர்புடையதாய், நம்பகதன்மையுள்ளதாய் இருக்க வேண்டும். ஒரு இலக்கை அடைவதற்கு என்னென்ன வாய்ப்புகளும் ஆதாரங்களும் கைவசம் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே விருது வாக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவன் காய்கறி வியாபாரம் செய்து வாழ்வின் நிறைவை அடைய தீர்மானித்தான் என்றால் காய்கறிகளைக் கொள்முதல் செய்வதற்கான பொருளாதாரம், அதனை வைத்து விற்பனை செய்வதற்குத் தேவைப்படுகின்ற இட வசதிகள் போன்றவை அவனிடம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்தே அவனுடைய வெற்றி அமையும்.

5. T = Time bound -  என்னுடைய இலக்கை அடைய நான் எடுத்துக்கொள்ளும் காலவரையறையினை குறிக்கின்றது. ஒரு செயலை செய்யப் போகின்றேன் என்றால் என்றைக்கு அல்லது எத்தனை மணிக்கு நான் அந்த வேலையைத் தொடங்க அல்லது முடிக்க தீர்மானித்திருக்கின்றேன் என்பதை இது குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக 'நான் காலையிலேயே எழும்பி உடற்பயிற்சி செய்வேன்' என்ற விருது வாக்கை எடுத்திருப்பேன் என்றால் அதிலிருந்து எளிதாக நான் அடிபிறழ வாய்ப்புள்ளது. காரணம் காலை என்று குறிப்பிட்டேனே தவிர சரியாக கால அளவை நான் குறிப்பிடவில்லை. எனவே 'நான் தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை உடற்பயிற்சி செய்வேன்' என்று தீர்மானிப்பதே காலவரையறைக்கான இலக்கணமாகும்.

அவமானங்களை ஆயுதமாக்கு!

அவமானங்களை ஆயுதமாக்கு!
 
லண்டன் நகரில் வாழ்ந்துவந்த ஹென்னா என்பவர் மது மற்றும் கேளிக்கை விடுதி ஒன்றில் பாடல் பாடி நடனம் ஆடுபவராக இருந்தார். கணவனின் பொறுப்பற்ற தன்மையினால் குடும்பம் சீர்குலைந்திருந்தது. ஒரு நாள் கேளிக்கை விடுதியில் ஹென்னா பாடிக்கொண்டிருக்கும் போது அவளுடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினையினால் பாடல் கேலிகூத்தாகியது. எல்லோரும் சிரித்தார்கள். ஹென்னா அவமானத்தால் அழுதாள். ஒரே கூச்சல், குழப்பம். ஹென்னா அவமானத்தால் மேடையிலிருந்து இறங்க அவருடைய ஆறு வயது மகன் மேடை ஏறினான். தன் இளம் குரலினால் பாடி, பிஞ்சு கால்களினால் ஆடி அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். இவனுடைய கேளிக்கை விருந்தை அனைவரும் ரசித்தனர். கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. சில்லரை காசுகளை அவன் மேல் வீசி எறிந்தனர். சில்லரையை வேகமாகப் பொறுக்கினான் அந்தச் சிறுவன். எல்லோரும் அவனைப் பாட வற்புறுத்தினர். 'ஒரே நேரத்தில் இரண்டு வேலையைச் செய்யமுடியாது' என்று கூறி அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்தினான். இதுவே உலகம் போற்றும் ஒரு மாமனிதனின் முதல் கருவறை. இந்தச் சிறுவன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் வயிற்றில் கருவானான். இன்று தன் தாய் பட்ட அவமானத்தால் உருவானான்;. அவமானங்கள் நம்மை அழுத்தி, நம் வாழ்வையே சூனியமாக்கும் என்பதை உணர்ந்து அவமானத்தையும் ஆயுதமாக மாற்றிய இவன்தான் இன்று உலகம் போற்றும் அழியா நகைச்சுவை வேந்தன் சார்லி சாப்ளின்.

11 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தற்கொலை விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 15 முதல் 25 மடங்கு அதிகரித்துள்ளது. தேர்வில் தோற்றுப்போய்வி;ட்டால், தான் கேட்டதைப் பெற்றோர்கள் வாங்கித்தரவில்லை என்றால், தான் ஒருதலையாக விரும்பிய பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பெற்றோர் அல்லது ஆசிரியர் திட்டிவிட்டால் இள வயதுடைய மாணவர்கள் எளிதாக அவமானப்பட்டவர்களாய் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தச் செய்திகளை அன்றாட செய்தித்தாள்கள் நமக்கு சுமந்து வருகின்றன. மொத்தத்தில் வலியையோ, தோல்வியையோ தாங்கிக்கொள்வதற்கும் அதனைக் கடந்து வருவதற்கும் நம் மாணவர்கள் தங்களை தயாரித்துக்கொள்ளவில்லை.

தற்கொலை எண்ணங்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1.    தன்னம்பிக்கையின்மை
2.    மன அழுத்தம்

தன்னம்பிக்கை இல்லாத மாணவர்கள் எளிதாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர். தன்னம்பிக்கையின்மை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அமைகின்றது. தன்னைப் பற்றி தனக்கே ஒரு நல்ல பார்வை இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. தன்னம்பிக்கையில் வளருகின்ற மனிதர்கள் அவமானங்களை கூட ஆயுதங்களாக பயன்படுத்தி வளரமுடியாத சூழ்நிலையில் கூட வாழ்ந்துகாட்டிவிடுகின்றனர்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் மனஅழுத்தத்தின் உச்சிக்குச் செல்வதால் அவர்களால் நிதானமாச் சிந்திக்கமுடியாமல் போய்விடுகின்றது. ஒரு நிமிட வேதனைக்காகப் பல ஆண்டு வாழ்க்கையை மாய்த்துக்கொள்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடு;பட நண்பர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ தங்கள் உள்ளுணர்வுகளைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் குறைய குறைய தற்கொலை எண்ணம் குறைகின்றது.

தன்னம்பிக்கையே வாழ்க்கை. தன்னம்பிக்கையை இழப்பது என்பது பறந்தால் மட்டுமே வாழ்வு என்றிருக்கும் பறவை தன் சிறகுகளை இழப்பது போன்றது. அவமானங்களே ஒருவனை செதுக்குகின்றது எனில் அந்த அவமானங்களைக் கண்டு கலங்கவேண்டாம்.

ஊனக் கண்ணிலிருந்து விடுபடு!

ஊனக் கண்ணிலிருந்து விடுபடு!

   முக்கோணத்தினுள் இருக்கும் வார்த்தைகளை வாசித்து விரைவாகச் சொல்லவும்.

   பலரும் "Paris in the Spring" என்று தான் சொல்வார்கள்.  மனிதர்களின் மூளை எப்போதுமே அவசரத்தில் செயல்படும்போது தவறு இழைக்கின்றது. நாம் ஒவ்வொரு வார்த்தையாக பகுத்து வாசித்திருந்தோமானால் தவறை தவிர்த்திருப்போம். ஆனால் அவசரத்தில் எல்லா வார்த்தைகளையும் தொகுத்துப் பார்க்கும் போது நம் மூளை பிழை ஏற்படுத்துகின்றது. நாம் நம்மைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் பல உண்மைகளும் பிறர் நம்மைப் பற்றி பகுத்து சொல்லியனவே ஆகும். எடுத்துக்காட்டாக 'உனக்குப் பேசத் தெரியாது', ' நீ ஒரு முட்டாள்,' ' உன்னால் சாதிக்க முடியாது', நீ ஒன்றுக்கும் உதவாதவன்'. நாமும் இவற்றையே உண்மை என்று நம்பி நம் ஆழ் மனதில் பதியச்செய்கின்றோம். இத்தகைய எதிர்மறை எண்ணங்களே நம் ஆளுமையை வெகுவாகப் பாதிக்கின்றன. இதனையே நாமும் நம்பி ஏற்றுக்கொள்கின்றோம். நம் மூளை நம்மைப் பற்றி தவறாக, எதிர்மறையாகப் பதியவைத்திருக்கும் எண்ணங்களைக் கட்டவிழ்ப்பு செய்வோம். நம் உண்மைத் தன்மையைக் கண்டுணர்வோம்.


பசுமைப்பூக்கள்: திரைப்படத்தைத் திறனாய்வு

பசுமைப்பூக்கள்: திரைப்படத்தைத் திறனாய்வு: திரைப்படத்தைத் திறனாய்வு திரைப்படத்தைத் திறனாய்வு செய்வதற்கான வழிமுறைகள் அ) திரைப்படத்தின் பின்புலத்தை ஆய்க 1. திரைப்படத்தின் கதாசிரி...

திரைப்படத் திறனாய்வு

 திரைப்படத் திறனாய்வு
திரைப்படத்தைத் திறனாய்வு செய்வதற்கான வழிமுறைகள்
 அ) திரைப்படத்தின் பின்புலத்தை ஆய்க
1.    திரைப்படத்தின் கதாசிரியர் யார்?
2.    எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை வேறு கதைகளிலிருந்து தழுவப்பட்டிருக்கின்றதா?
3.    இத்திரைப்படத்தின் இயக்குநர்; யார்?
4.    இந்த இயக்குநரின் பிற திரைப்படங்கள் யாவை?
5.    இவருடைய மற்ற திரைப்படங்களின் சாயல் அல்லது தழுவல் இத்திரைப்படத்தில் உள்ளதா?
6.    திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
7.    திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் எது? அரசியல், சமயப் பின்புலம் உள்ளதா?
ஆ) திரப்படத்தின் கதைக் கருவை ஆய்க
1.    திரைப்படத்தின் மையக் கரு என்ன?
2.    திரைப்படத்தின் மையக் கரு சரியான விதத்தில் எடுத்துக்கூறப்பட்டிருக்கின்றதா?
3.    திரைப்படத்தின் கதை எந்தக் கதை வடிவத்தைக் கொண்டுள்ளது (நகைச்சுவை, காதல், சமூகம், நட்பு, குடும்பம், புலனாய்வு, இன்னும் பிற)?
4.    திரைப்படத்தின் கதைக் கரு எந்த வயதினரை அல்லது வகுப்பினரை மையப்படுத்தியது (குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர், ஊனமுற்றவர்கள், இன்னும் பிற)?
இ) திரைப்படத்தின் கதைக் களம் பற்றி ஆய்க
1.    திரைப்படத்தின் கதைக் களம் என்ன?
2.    எங்கு வைத்துத் திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது?
3.    கதையில் வரும் மக்களின் கலாச்சாரப் பண்பாட்டுச் சூழல் என்ன?
4.    கதைக் களம் கதைக்குப் பொருத்தமானதாக, தொடர்புடையதாக இருக்கின்றதா?
ஈ) திரைப்படத்தின் கதாபாத்திரங்களை ஆய்க
1.    திரைப்படத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள் உள்ளனவா?
2.    திரைப்படத்தில் உங்கள் மனதைக் கவர்ந்த கதாபாத்திரம் எது? ஏன்?
3.    யாரை திரைப்படத்திற்குத் தேவையற்ற கதாபாத்திரம் என நீங்கள் சொல்வீர்கள்?
உ) திரைப்படத்தின் வடிவமைப்பை ஆய்க
தொடக்கக் காட்சியமைப்பு
1.    திரைப்படத்தின் தலைப்பு இத்திரைப்படத்திற்கு எவ்வகையில் தொடர்புடையதாக இருக்கின்றது?
2.    திரைப்படத்தின் தொடக்கப் பெயர்ப் பட்டியல் எவ்வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. அதற்கும் திரைப்படத்திற்குமான தொடர்பு என்ன?
3.    திரைப்படத்தின் தொடக்கக் காட்சி சரியாகக் கையாளப்பட்டதா?
தொடர் காட்சியமைப்பு
4.    திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் வேறு எந்தப் படங்களிலும் பேசப்பட்டுள்ளதா?
5.    படத்தின் முக்கியமான காட்சிகள் என்று நீங்கள் எவற்றையெல்லாம் சொல்வீர்கள்?
6.    படத்தின் மேம்பாட்டிற்காகப' பயன்படுத்தப்படும் ஒலி அளவீடு என்ன? குறிப்பாகப் பதட்டம், உச்சக்கட்ட ஆபத்து, நகைச்சுவைத் தருணங்கள் முதலியன.
7.    திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம், ஒளி அளவு, சூழல் காட்சிகளில் கையாண்ட விதம் யாது?
8.    திரைப்படத்தில் கேமரா கோணங்கள் பலவிதத்தில் தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
9.    திரைப்படத்தில் வரும் பாடல் காட்சிகள் தேவையான இடத்தில் வருகின்றனவா அல்லது திணிப்பாகத் தெரிகின்றதா?
10.    மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய ஒளிப்பதிவு காட்சிகள் எவை?
11.    திரைப்படத்தில் தேவையற்றக் காட்சிகள் அல்லது வசனங்கள் அல்லது கதாபாத்திரங்கள் என எவைகளை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
இறுதி நிலை காட்சியமைப்பு
12.    திரைப்பட இறுதி காட்சியமைப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது?
13.    திரைப்படத்தின் நிறைவில் ஏதேனும் திருப்பம் நிகழ்கிறதா?
14.    இறதி காட்சியமைப்புக்கும் கதையின் மையத்திற்கும் தொடர்பு உள்ளதா?
15.    திரைபட அரங்கிலிருந்து வெளிவரும்போது உங்கள் மனநிலை உணர்வுகள் என்ன?

தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரவாதம்

தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரவாதம்

அமெரிக்கா ராணுவத்தினால் தேடப்பட்ட, தீவிரவாதி என்று முத்திரையிடப்பட்ட ஓசாமா 02.05.2011 அன்று பாக்கிஸ்தானில் வைத்துக் அமெரிக்க ராணுவத்தினால் கொல்லப்பட்டார். செய்தி அறிந்த அனைவரும் மகிழ்சியில் அக்களித்தனர்.

யார் இந்த ஒசாமா? சவுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் முகமது பின் அவாத் பின்லேடனுக்கு 17 வது மகனாக 1957ம் ஆண்டு ஓசாமா பின் லேடன் பிறந்தார். ஓசாமாவனி; தந்தைக்கு 54 குழந்தைகள் இருந்த போதிலும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வாந்தார். பின் லேடன் ஜெட்டாஹ்கிங் அப்துல்லா அஜிஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் படித்தவர்.

இத்தகைய மனிதர் அமெரிக்காவால் தான் உருவாக்கப்படுகின்றார். அப்கானிஸ்தானில் ரஸ்ய படைகளை விரட்டியடிக்க அமெரிக்கா ஒசாமாவிற்கும் அவனுடைய கூட்டாளிக்கும் நவீன ஆயுதங்களையும் போர் பயிற்சியினையும் வழங்கி அவர்களை ரஸ்ய படைக்கு எதிராக இயக்கிவிடுகின்றது அமெரிக்கா.

அமெரிக்காவின் நிழலிலும் பணத்திலும் செழித்து வளருகின்ற பின்லேடன் இயக்கம் ஒருகட்டத்தில் அமெக்காவிற்கு எதிராக திரும்பியதன் விளைவாக அமெரிக்க இரட்டை கோபுரம் விமான தாக்குதலினால் தரைமட்டமாக்கப்படுகின்றது. இதனால் அமெரிக்காவின் முதல் எதிரியாக மாறுகின்றார் ஒசாமா.

இந்த 10 ஆண்டுகளில் ஒசாமை பிடிக்கப்போகின்றோம் என்ற பெயரில் அமெரிக்க அரசி செலவ செய்தது 58.5 லட்சம் கோடி ருபாய். இதற்காக 6000 அமெரிக்க வீரர்கள் தங்களையே பலிக்கொடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய 12 லட்சம் அப்பாவி பொது மக்கள் தேடுதலின் போது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இது ஒசாமா கொன்ற மக்களை விட அதிகம் ஆகும்.
ஒருமனிதனை தீவிரவாதியாக உருவாக்கிவிட்ட குற்றத்திற்காக மட்டுமல்லாமல் இத்தனை அப்பாவி மக்களை பலி வாங்கிய அமெரிக்காவை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பது யார்?

தீவிரவாத்திற்கு எதிரான தீவிரவாதம் நீதியானதா? தீவிரவாதத்திற்கு எதிரான முழக்கம் என்றால் அது அமெரிக்காவிற்கு எதிரான முழக்கமாக தான் இருக்க முடியும்.




முகமூடி மனிதர்கள்

முகமூடி மனிதர்கள்

முகமூடி அணிந்திருந்தார்கள் அவர்கள். பார்க்கவே அடி வயிறு ஆட்டம் கொண்டது. என்னை அந்த அறைக்குள் தள்ளி கதவை தாளிட்டார்கள். 

கைகளில் பயங்கர ஆயுதங்கள். என்ன நடக்கப்போகின்றதோ என்ற பீதி எனக்குள்.

என் நகைகளை எல்லாம் கழற்றி விட்டார்கள். ஒவ்வொறு நகையும் எனக்கு பிடித்த நகைகள். என் தந்தை ஆசையாசையாய் வாங்கித் தந்தது.

முகமூடி அணிந்த ஒருவர் என் அருகில் வந்து என் உடைகளை கழற்றச் சொன்னார். என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. தயக்கத்தோடு என் உடைகளை களைந்தேன். என் மானத்தை காத்துக்கொள்ள ஒரு சிறு ஆடை கொடுத்தார்கள். அள்ளி அணிந்துக்கொண்டேன். படுக்கவைத்து பல கோணங்களில் படம் எடுத்து பதிவுச்செய்தார்கள்.

காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது இவர்கள் என்னை ஒரு வழி பண்ணப்போகின்றார்கள் என்று.

முகமூடி அணிந்து வாட்டச்சாட்டமாய் இருந்த ஒருவர் என்னருகில் வந்து என்னை ஒரு ஊசியால் குத்தினார். நான் மயங்கிப்போனேன். பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.

கண்திறந்து பார்த்தேன். 'வாழ்;த்துக்கள் ! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கின்றது' என்றார் மருத்துவர் ஒருவர். என்னருகில் 

கொண்டுவரப்பட்ட என் குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டேன் நான்.

மருத்துவர்கள் என் குழந்தையை மட்டும் பெற்றெடுக்க உதவவில்லை என்னையும் பெற்றெடுத்தார்கள்.

உயிர், Life and Love

உயிர்
முப்பத்தியாறு வருடங்களுக்கு முன் மும்பையின் கே.யி.எம் மருத்துவமனையில் பணிபுரிந்தவர் அருணா. அதே மருத்துவமனையில் பணிபுரிந்த சோகன்லால் பாரத் வால்மீகி என்பவனால் நாய் சங்கிலியால் கட்டி பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு  வன்மையாக தாக்கப்பட்டு நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்த நிலையில் முப்பத்தியாறு வருடங்களாக சுயநினைவு இழந்து படுத்தப்படுக்கையாக அதே மருத்துவமனையில் கிடக்கிறாள் அருணா.

அருணாவை கருணை கொலை செய்ய நீதிமன்றம் தீர்ப்பிட வேண்டும் என்று பிரபல பெண் எழுத்தாளர் பிங்கி விராணி மனுதாக்கல் செய்திருந்தார். அருணா தாவர நிலையிலேயே இருக்கின்றாள் என்பது இவரது வாதம். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுப்படி செய்து உயிரின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியது.

உயிர் என்பது உலக அதிசயம், கடவுளின் இருத்தலை ஆழமாக மெய்பிக்கும் அர்ப்புதம். உலக உயிரிகளை எல்லாம் ஒரே சங்கிலியில், சமநீதி சக்கரத்தில் இணைத்து வாழ்வளிக்கும் உத்திரவாதம்.

இந்த உயிர் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகின்றது. இந்த உயிரை பாதுகாக்கவும் பராமரிக்கவும் தான் மனிதன் படைக்கப்பட்டடிருக்கின்றான். போர், வன்முறை, கொலை போன்ற மனிதமற்ற செயல்களால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு உயிர் ஊதி பெருக்க மற்றொரு உயிர் அழிக்கப்படலாம் என்ற தத்துவம் உயிருக்கு உலை வைக்கின்றது.

கருணை என்பது மனிதனின் பல பண்பான  குணங்களில் ஒன்று. கருணை அன்பிலிருந்து ஊற்றெடுக்கின்றது. கருணை கொல்லாது மாறாக வாழ்விக்கும் ஆற்றல் கொண்டது. இன்று கருணை போன்ற வார்த்தைகளின் உள்ளர்த்தம் திரிக்கப்படுகின்றது. கருணை கொலையும் செய்யும் என்று மெய்பிக்கப்படுகின்றது.

கருணை என்பதே கிழங்கு வகைகளில் ஒன்று என்றாகி விட்டது என்ற அர்த்தத்தில் கிண்டலடிப்பார் புதுமை பித்தன்.

கருணையின் உண்மை பொருள் அறிவோம் ! உயிர்க்கு உத்திரவாதம் தருவோம் !

அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவே பிடிக்காது, I and my Girl


அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவே பிடிக்காது

அந்த பெண்ணை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அவள் அழகாய் இருப்பாள் ஆனாலும் அவளை எனக்கு பிடிக்காது. அவளைக் கண்டாலே ஒரு வித வெறுப்பு. நான் வேலைப் பார்த்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் அவள். கசங்கிய ஆடை, அழுக்கான காலணி, சீவாத தலைமுடி, தலைக்குனிந்த பார்வை இவையே அவள் அடையாளம். படிப்பு என்பது கசப்பு காய் அவளுக்கு. கையெழுத்து என்பது கோழி கிண்டிய தலையெழுத்து. அவளை கண்டாலே எனக்கு பிடிக்காது. அவளை திட்டியே தீர்ப்பேன். 'சனியன் ! என் உயிர எடுக்கவே வந்திருக்கினறது'.

அவளை பற்றி குறைச்சொல்ல தலைமையாசிரியரை அணுகினேன். அவளை பற்றி சொல்ல ஆரம்பித்தவுடனேயே அவர் இடைமறித்து அந்த பெண்ணை பற்றி அவர் சொன்னது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'அவளுடைய பெற்றோர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தப்போது விபத்திற்குள்ளாகி தாய் சம்பவ இடத்திலேயே இறந்து போனாள். தந்தை கால் ஊனமாக படுத்த படுக்கையானார். இந்த சிறு பிள்ளையை பார்க்க அவளுடைய வயதான பாட்டி மட்டுமே இருக்கின்றார்' என்று அவர் சொன்ன உடனேயே என் மனம் வேதனையில் ஆழ்ந்தது.

அவளை பார்த்த பார்வை அடியோடு மறைந்து போனது. அவள் என்னை பார்த்து சிரிக்கும் போது நான் என்னை பார்த்து சிரித்துக்கொண்டேன். அவள் என்னை பார்த்து புன்முறுவல் செய்யும் போது நான் எனக்குள்ளேயே அழுதுக் கொண்டேன்.

பார்வை மாறும் போது எல்லாமே மாறுகின்றது.

தேர்தல் தவறு, Election and Err

எச்சரிக்கையாய் இருப்போம். 
மதவாத பயங்கரவாதத்தை தவிர்ப்போம்.

ஒட்டுமொத்த தமிழகமே தேர்தல் தவறு இழைத்துவிடுமோ என்று ஐயம் எழுகின்றது.

தேர்தலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து அதே கட்சியில் உள்ளவர்களே போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியிருப்பது கட்சியின் பலத்தை குறைக்கின்றது. கட்சி அரசியலின் உண்மை தன்மையை அவர்கள் விசுவாசத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

மதச்சார்பற்ற கட்சிகளின் ஓட்டு பிரிவதன் மூலமாக மதச்சார்பு கட்சிகளும், தீவிரவாத சமய பயங்கரவாதிகளும் தேர்தலில் வெற்றிப்பெறும் அபாயம் இருக்கின்றது. எனவே நம் நிலைப்பாட்டில் ஒற்றுமை தேவை.

எச்சரிக்கையாய் இருப்போம். சுய லாபம் பார்க்கும் வேட்பாளர்களை புறக்கணிப்போம்.

ஒன்று சேர்ந்து நம் ஓட்டுகள் சிதராமல் சிந்தாமல் மதச்சார்பற்ற கட்சி வேட்பாளர்களுக்கு நம் ஆதரவை கொடுப்போம்.

மதவாத பயங்கரவாதத்தை தவிர்ப்போம்.


எகிப்து புரட்சியும் இளைய இணையமும், Egypt and internet revolution

எகிப்து புரட்சியும் இளைய இணையமும்

    இணையத்தினை இளைஞர்கள் தவறுதலாக மட்டுமே பயன் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. சமீபத்தில் 30 ஆண்டுகாலமாக 1981 ல் இருந்து கொடுங்கோலாட்சி செய்து வந்த ஹாசினி முபாரக்கின் ஆட்சியை புரட்சி செய்து புரட்டிப் போட்டிருக்கின்றது இளைய இணையம்.

    பேஸ் புக் (Facebook) எனும் சமூக தொடர்பு வலைத்தளம் எகிப்தின் தலை எழுத்தையே மாற்றியிருக்கின்றது. எகிப்தின் 8,00,000 இளைஞர்கள் இந்த சமூக தொடர்பு வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தங்களின் கருத்துக்களை, அதிர்ப்திகளை பதிவுச் செய்கின்றனர். ஒத்தக் கருத்துடையவர்கள் சில ஆயிரம் பேர் இணைந்து வலைக்குழுக்களாக (groups) தங்களை இணைத்துக்கொள்கின்றார்கள். காரச்சாரமான விவாதங்களும் (group Chat) புதிய புரட்சிகர கருத்துருவாக்கங்களும் பரவலாக்கம் செய்யப்படுகின்றன. அரசு நடத்தும் கொடுமைகளும், கொலைகளும், கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறை காட்சிகளும் பரிமாறப்படுகின்றன. இவை இளைய சமூதாயத்தினர் மனதில் தாக்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனால் வலைக்குழுக்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்  தெருக்களில் இறங்கி போராட துணிந்தார்கள். இதனாலையே எகிப்து புரட்சி அரும்ப தொடங்கியது.

    எகிப்து புரட்சியின் வெற்றியை பெற்று தந்த பேஸ்புக் (Facebook) வலைத்தளத்தை பாராட்டும் பொருட்டு ஜமால் இப்ராகிம் என்ற மனிதர் தன் மகளுக்கு பேஸ்புக் ஜமால் இப்ராகிம் என்று பெயர் சூட்டியிருக்கின்றார்.

டிஜிட்டல் சுனாமி, Digital World

டிஜிட்டல் சுனாமி

உலகத்தினை உள்ளங்கையிலே வைத்து பார்க்கும் பேறு இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் கண்டிராத கேள்விப்படாத உயர்தர டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் நம் இளைஞர்களின் அன்றாட பழக்கவழக்கங்களாகி விட்டன. நகரத்து இளைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதப்பட்ட டிஜிட்டல் யுகம் கிராமத்து மூலை முடுக்குகளிலும் பேரொலியாய் ஒலிக்க தொடங்கி விட்டன. இன்று இந்த டிஜிட்டல் தொழில் நுட்பங்களையும் இளைஞர்களையும் பிரித்து பார்ப்பது என்பது இயலாத ஒன்று.  

Computer, Cell Phone, I-Pod, I-Pad, Laptop, LCD, LED, Web Cam,   என்று ஊடகத்துறையில் தொழில் நுட்ப புரட்சி உலக சந்தையில் சக்கைப் போடு போடுகின்றது. 80 சதவிகித இளையோரே இதன் ஒட்டு மொத்த நுகர்வோராக இருக்கின்றனர். இளைஞர்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் இந்த டிஜிட்டல் சுனாமிக்கு பலியாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

ஊடகத்துறையில் பல தொழில் நுட்பங்கள் சந்தையில் வந்தப்பிறகு இணையத்தின் அசூரத்தனமான வளர்ச்சி வியப்பை ஏற்படுத்துகின்றது. இணையத்தினை ஒரு வழுக்குப்பாறை எனலாம். சரியான புரிதல் இல்லாத இளைஞர்களை இது எளிதில் வழுக்கி விழச்செய்யும்.

வலை விபத்துக்கள் , Internet Beware

வலை விபத்துக்கள்

    இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள் பல இருப்பினும் இளைஞர்களை வழி தவறச் செய்யும் யுக்தியும் இணையத்திற்கு அதிகமாகவே உண்டு. இன்று அதிகமாக இணையத்தினை பயன்படுத்துபவர்கள் இளையோரே. இணையத்தற்கு முன்பாக முற்றிலும் சரணாகதியாகி, அடிமையாகி அல்லலுருகின்ற இளையோரின் கதைகள் பல உண்டு. இளைஞர்களை வலையில் விழவைக்கும் விபத்துக்கள் சிலவற்கை இங்கே காண்பேம்.

1.  Hackers: தொழில்நுட்ப முறைகேடு விளைவித்து உங்கள் வலைத்தள முகவரியை, குறியீட்டு எண்ணை வழிமறித்து அதனை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தும் போது உங்கள் பெயரில் தீமைகள் அரங்கேர வாய்ப்பு உண்டு.

2.    Scammers: உலக மோசடி ஆசாமிகள் வலைத்தளங்களில் உலாவருகின்றனர். உங்களுக்கு லாட்டரி அடித்துவிட்டது. நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக போகின்றீர்கள். பணத்தை பெற்றுக்;கொள்வதற்கு முன்பணமாக 1 லட்சம் கொடுத்தால் போதும் என்று கூறி மோசடியில் ஈடுப்படும் ஆசாமிகளை கண்டு இளையோர் கவனமாக இருக்க வேண்டும்.

3.    Spammers: சில மின்னஞ்சல்கள் உங்கள் கணிணியினை பாதிக்கக்கூடியதாக இருக்குக். விளம்பரங்களாகவோ, வைரசுகளாகவோ, வீண் சந்தை வியாபாரங்களாகவோ, எரிச்சலை தரக்கூடியதாகவோ இருக்கும். இதற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் கொடுக்கக கூடாது.

4.   Pornography: இளைஞர்கள் பலரை பலியாக்கி அவர்களின் பாலியல் உணர்வுகளை மிகைப்படுத்தி அவர்களை சீர்கெட தூண்டுவதும், தவறான பாலியல் கருத்துக்களை, காட்சிகளை விதைப்பதும் இணையத்தின் வலை விளையாடல்களே. இளைஞர்கள் இத்தயை கணிணியின் கண்ணியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

5.    Cyber Bullying: தன்கட்டுப்பாட்டில் ஒருவர் இருக்கவேண்டும் என்பதற்காக அந்த நபருக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதங்களும், கொச்சை உரையாடல்களும் நடத்தி இளையோரின் மனதை காயப்படுத்தி அவர்களை தற்கொலை செய்துக்கொள்ள கூட தூண்டும் மனிதர்கள் வலை தளங்களில் உண்டு. இவர்களின் வலைகளில் இளையோர் விழுந்து விடக்கூடாது.

6.   Cyber-Persona: நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் நல்ல உறவு இல்லாத இளைஞர்கள் மிக எளிதாக வலை விபத்துக்களில் சிக்கி விடுகின்றனர். இத்தகைய இளையோரை கொக்கிப்போட்டு பிடிக்கவே பல வலைத்தளங்கள் உண்டு. ஊர், பெயர், முகவரி தெரியாத மனிதர்களோடு உறவுக் கொண்டு நாள் முழுவதும் அவர்களோடு தொடர்பில் இருக்க இளைஞர்கள் விரும்புகின்றனர். இதனால் தங்கள் நேரத்தையும் தங்கள் வாழ்க்கையையும் விரயம் செய்யும் அபாயம் உண்டு.

இந்தியாவில் ஏறக்குறைய 45 கோடி இளைஞர்கள் உள்ளனர். இதில் சராசரி 15 கோடி இளைஞர்கள் இணையத்தினை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இச்சூழலில் இணையத்தின் ஆழத்தினையும அதன் ஆபத்தினையும்;, அகலத்தினையும் அதன் அபாயத்தினையும்,இளைஞர்கள் உணர்ந்திருப்பது நல்லது.

கண்ணீர் அஞ்சலி...

 கண்ணீர் அஞ்சலி...

சுனாமியால் வீடுகள் இழந்து, 
உறவுகள் இழந்து 
தவிக்கும் 
ஜப்பான் மக்களுக்கு 
எம் கண்ணீர் அஞ்சலி...

கிரிக்கெட் என்னும் அரசியல் விளையாட்டு, Cricket and Politics

கிரிக்கெட் என்னும் அரசியல் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் மனங்களிலும் எண்ணங்களிலும் கிரிக்கெட் போட்டியின் நினைவுகளே மேலோங்கியிருக்கின்றது.

பாராளுமன்றத்தை முடக்கிப்போட்ட தெலுங்கானா பிரச்சினை மக்களின் எண்ணங்களில் வருவதில்லை.

வரவிருக்கின்ற மாநிலங்களவை தேர்தல் அதன் முக்கியத்துவம் மக்கள் எண்ணங்களில் வருவதில்லை.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஸ்பெக்ட்ரம் மற்றும் ராசா பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதில்லை.

ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடுகள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படவில்லை.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற கருப்பு பணம் பற்றிய பேச்சு இல்லை.

உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்ற எகிப்து மற்றும் லிபியா புரட்சி பற்றிய செய்திகளுக்கு நம்மவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை.

காரணம்...

உலக கோப்பை கிரிக்கெட்..

விடையாட்டு வீரர்கள் நன்றாக விளையாடுகின்றார்களோ என்னவோ அரசியல் உலககோப்பை போட்டிகளில் நன்றாகவே விளையாடுகின்றது.




வாக்கு போடவா! தூக்கு போடவா ! Election and Right

வாக்கு போடவா! தூக்கு போடவா !

தேர்தல் காய்ச்சல் தொற்றிக் கொண்டு விட்டது. கட்சி அரசியல் பேச்சு வார்த்தைகள், குரங்கு தாவல்கள் எல்லாம் ஒரு விதத்தில் முடிவிற்கு வந்துக் கொண்டிருக்கின்றன.

தேர்தலின் போது நான்கு வித நிலைப்பாடுகளை கொண்ட மக்களை நாம் காண முடியும்.

1. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை கொண்ட மக்கள்.

2. திருடர்களையும் ஊழல் பெருச்சாளிகளையும் தேர்ந்தெடுக்க ஏன் வாக்களிக்க வேண்டும்  எனும் மனநிலைக் கொண்ட மக்கள்.

3. கொள்கை இல்லாமல் பணத்துக்கும் சலுகைக்கும் ஆசைப்படும் மக்கள்.

4. கொள்கையினை உயிர் மூச்சாக கொண்டு சிறந்த தலைவர்களை தெளிந்து தேர்ந்தெடுப்பவர்கள்.

 தேர்தலை சரியாக ஜனநாயக முறையில் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருந்தாலும் தேர்தலில் ஜனநாயக கடமையாற்றுவது மக்களின் கடமையாகும்.

இது வரை 57 சதவிகிதம் தான் மக்களவை தேர்தலின் உச்சக் கட்ட வாக்கு பதிவாக இருந்திருக்கின்றது.

மீதமுள்ள 43 சதவிகிதம் மக்கள் ஜனநாயகத்தை புறக்கணித்திருக்கின்றார்கள், தங்கள் உரிமையை மறுத்திருக்கின்றார்கள்.

இதனால் தான் ஊழல் பெருச்சாளிகளும், திருடர்களும், ரவுடிகளும் நாட்டை ஆளக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த 43 சதவிகிதத்தினரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியிருப்பார்கள் என்றால் இந்த நிலை வந்திருக்காது.

நல்லாட்சி அமைய, மக்கள் கவலையில்லாமல் வாழ, மனிதம் மலர, பொருளாதாரம் சிறக்க, மானுடம் காக்கப்பட நல்லவர்களை, கொள்கைவாதிகளை தேர்ந்தெடுப்பீர்!

வாக்கு போட தவறுவது என்பது தனக்கு தானே தூக்குப் போட்டுக்கொள்வதற்கு சமமானது.

சாலையோர இம்சை...Street Light

சாலையோர விளக்கு...

அது ஒரு மாலை நேரம். சாலையோரம் பேருந்து நிறுத்தில் நின்றுக்கொண்டிருந்தேன். மக்கள் தங்கள் அலுவலக வேலை முடித்தும், மாணவர்கள் பள்ளி கல்லூரி முடித்துக்கொண்டு வீடு செல்ல பேருந்துக்காக காத்துக்கிடந்தனர்.

சாலையோர தேனீர் கடையில் கூட்டம் அலைமோதியது. தேனீர் குவளையை கையில் அழகாக பிடித்தப்படி உதட்டோரமாக குடிக்கும் முறையே ஒரு பெருமிதம் தரும்.

நானும் தேனீர் சுவைத்தப்படி ரீங்கரிக்கும் தேனீயாக கண்பார்வையை மக்கள் நோக்கி கூர்மைப்படுத்தினேன்.

பிச்சை எடுக்கும் பெண் ஒருத்தி தன் கைக் குழந்தையோடு சாலையோரம் பேருந்துக்காய் நின்றுக் கொண்டிருப்பவர்களிடம் தன் கையை நீட்டி பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

பிச்சை கேட்பவரிடம் சில பேர் தலையை அசைத்து இல்லை என்றார்கள். சிலர் நின்றுக்கொண்டிருந்த இடத்தை விட்டு வேறு இடம் நகர்ந்தனர். சிலர் மௌனமாய் கண்டுக்காதவர் போல் நின்றனர். சிலர் திட்டி தீர்த்தனர். சிலர் சில்லரைக்காய் மேல் கீழ் சட்டை பையை ஆராய்ந்தனர்.

இக்காட்சிகளை கூர்ந்து பார்ப்பதிலும் மக்களின் முக, உடல், மன பாவனைகளை, அசைவுகளை கவனிப்பதே என்னைப் போன்ற சிலரின் புத்தியாக இருந்தது.

'சகோதரா! வடை கேட்டிருந்தீர்களே. இதோ வடை சூடா இருக்கிறது' என்று சூம்பி போன இடது கையை கொண்ட அந்த இளைஞன் முக மகிழ்சியோடு தன் தன்னம்பிக்கையை நீட்டினான்.

உண்மையான ஏழைகள் சாலையில் பிச்சை எடுப்பவர்கள் அல்ல சாலையோரத்தில் சிறுத் தொழில் செய்து தங்கள் வயிற்றை நிறப்பிக்கொள்பவர்களே.

ஏழைகளின் மேல் அக்கறை கொண்டவர்கள் பிச்சை கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்கள் அல்ல. சாலையோர வியபாரிகளிடம் பொருட்களை வாங்கிக்கொள்பவர்களே.


கவலைப் படாதே சகோதரா... 'இதுவும் கடந்து போகும்', let go

கவலைப் படாதே சகோதரா...
'இதுவும் கடந்து போகும்'


கவலை என்ற சிறு கல்லை நம் கண்ணுக்கு முன்பாக வைத்து பார்க்கும் போது அந்த சின்ன கல் கூட பெரிய பாராங்கல்லாக இருந்து நம் பார்வையை அது மறைத்து விடுகின்றது. இதனால் எதிரில் இருக்கின்ற வாய்ப்புகள் கூட நம் கண்ணுக்கு தெரிவதில்லை.

வாழ்கையில் மிகவும் செல்வ செழிப்போடு வாழ்ந்த மனிதர் ஒருவர் செல்வமெல்லாம் இருந்த பிறகும்  கவலையோடு காட்சியளித்தார்.

செல்வத்தனின் பக்கத்து வீட்டிலேயே ஓர் ஏழை மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். இதனை பார்த்த செல்வந்தனுக்கு எப்படியாவது மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியத்தை அந்த ஏழை மனிதனிடமிருந்து பெற்று விட வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஏழையின் வீட்டிற்குச் சென்ற செல்வந்தன் அந்த ஏழையிடம் 'நீ மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியம் என்ன?' என்று கேட்டான்.

ஏனழ மனிதன் தனது வீட்டின்; கூரையில் வைத்திருந்த காகித சுருளை செல்வந்தனிடம் நீட்டினான். 'நீ எப்போது கவலையின் விழும்பில், துன்பத்தின் நிழலில் இருக்கின்றாயோ அப்போது இந்த காகித சுருளை பிரித்து பார்' என்றான்.

அந்த செல்வந்தன் அந்த காகித சுளுளை பத்திரமாக பாதுகாத்து வந்தான். ஒருமுறை அவன் தன் செல்வத்தை எல்லாம் இழந்து கவலையில் ஆழ்ந்தப் போது அந்த காகித சுழுளியே இவ்வாறாக எழுதியிருந்தது.

'இதுவும் கடந்து போகும்'.

காலம் உருண்டோடியப்போது செல்வந்தனுடைய கவலையும் மறைந்திருந்தது. செல்வந்தன் இழந்துப் போன செல்வத்தையெல்லாம் மீண்டும் சேர்த்து மகிழ்ச்சியின் விழும்பில் நின்றுக்கொண்டிருந்தான்.

அப்போது அவன் காலில் ஒரு காகித சுளுள் தட்டுப்படுவதை பார்த்தான். அதனை எடுத்து விரித்து வாசித்தப் போது இவ்வாறு எழுதியிருந்தது.

'இதுவும் கடந்து போகும்'.

சமயம் என்னும் சகதியில்...Religion and Reason

சமயம் என்னும் சகதியில்...

சமயம் என்றால் சமைத்தல் அல்லது பண்படுத்துதல் என்பது பொருள். மனிதனை பண்படுத்தி புது மனிதனாக பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் ஆகும்.

மனிதனை நெறிப்படுத்தாது மனிதனை மடையனாகவும் மத வெறியனாகவும் மாற்றும் சமயம் சமயம் ஆகாது.

இன்று சமயத்தின் பெயரால் பண்படுத்துதலைவிட புண்படுத்துதலே அதிகளவில் அரங்கேறுகின்றன.


கலவரங்களும், கொலைகளும், கோயில் இடிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும் சமயத்தின் பேயராலேயே நிகழ்கின்றன.

இச்சூழலில் சமயம் என்னும் சகதியில் உழல்வதை விட சமயத்தினை மறு வாசிப்பு செய்து அதனையே விடுதலையின் ஆயிதமாக்கிட வேண்டும்.


நம் கடவுள் ஆதிக்கபோக்கின் கடவுள் அல்ல விடுதலையின் கடவுள்.
நம் கடவுள் வன்முறையின் கடவுள் அல்ல வாழ்வுமுறையின் கடவுள்.
நம் கடவுள் அடிமைதனத்தின் கடவுள் அல்ல ஏழைகளின் கடவுள்.

சமயம் நம்மை விடுவிக்கட்டும் நம்மை அடிமையாக்க வேண்டாம்.
சமயம் நம்மை தூண்டியெழுப்பட்டும் நம்மை தூங்கச்செய்ய வேண்டும்.
சமயம் நம்மை சமைக்கட்டும் நம்மை சகதியாக்க வேண்டாம்.

ஊடக உலகில் உண்மை ஊமையானால்...Media and Message

ஊடக உலகில் உண்மை ஊமையானால்...

இன்று உண்மையை உரைக்க கூறக்கூடிய ஊடகங்கள் கட்சி முலாம் பூசப்பட்டு கட்சிகளின் பூதக்கண்ணாடிகளாக காட்சி தருவதோடு தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்துகின்றன.

ஜெயா தொலைக்காட்சியில் உண்மை என்று சொல்லப்படுவது கலைஞர் தொலைக்காட்சியில் பொய் என்று வாதிடப்படுகின்றது. தனக்கு சார்புள்ள, தன்னை பாதிக்காத செய்திகளை தருவதில் தான் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.

மெகா தொடர்கள் என்றப் பெயரில் விபச்சார கலாச்சாரத்தையே தமிழக ஒட்டு மொத்த கலாச்சாரம் என்று மிகைப்படுத்தி காட்டுகின்றன.

ஊடகங்களுக்கிடையேயான போட்டியின் காரணமாக விபாபார நோக்கில் விளம்பர வருமானத்தையுமே முன்னிருத்தி நிகழ்சிகள் தயாரிக்கப்படுகின்றன.

மக்கள் ஊடகங்களான கிராமிய கலைகள் மழுங்கடிக்கப்பட்டு நுணி நாக்கின் ஆங்கிலமே ஊடக மொழியாக பயன்படுத்தப்படுகினறன.

ஊடகத்தின் ஊமை தன்மையை அகற்றுவோம் ! உண்மை உரைக்கும் ஊடகம் காண உழைப்போம் !


தோள்துண்டு அரசியல், Fake Politics and Fraud Principles

தோள்துண்டு அரசியல்

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்க வேண்டும். கொள்கையில்லா அரசியல் கொத்தடிமை அரசியல், பச்சோந்தி அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்.

சுயமரியாதை பேசிய கட்சிகள் இன்று சுயநலத்தை மட்டுமே கொள்கையாகவும் குடும்பத்தை மட்டுமே வேட்பாளராகவும் கொண்டிருக்கின்றன.

போன தேர்தலின் போது அடிப்பிடி, வெட்டுக்குத்து சண்டை போட்டுக்கொண்ட கட்சிதலைவர்கள் இந்த தேர்தலின் போது கைகுலுக்கி, கட்டிப்பிடித்து புகைப்படத்திற்கு சிரித்தப்படியே காட்சியளிப்பது கொள்கையற்ற அரசியலின் ஒட்டுமொத்த கோர முகமாக இருக்கின்றது.

தோள்துண்டின் நிறத்தினை மாற்றிக்கொள்ளமல் இருப்பதையே தனது கொள்கையாக கொண்டிருக்கின்ற அரசியல் தலைவர்கள் தன் தோலின் நிறத்தை திரும்ப திரும்ப மாற்றி கொண்டிருப்பது அவர்களின் பச்சோந்தி தனத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

பச்சோந்திகளை அடையாளப்படுத்துங்கள் ! பச்சை தமிழனாய் வாழ்ந்திடுங்கள் !

வலையை ஆழத்தில் போடுங்கள்

வலையை ஆழத்தில் போடுங்கள்

ஊடகத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் கட்டுக்கடங்காத விதத்தில் போய் கொண்டிருக்கின்றது. ஊடகத்தினை கூர்மைப் படுத்தும் போது இலக்கினை எளிதாக அடையமுடிகின்றது.

இணையத்தினை சரியாக பயன்படுத்தும் போது ஒரு சமூக மாற்றமே நடைபெறக்கூடும் என்பதை தான் எகிப்து, ஏமன், பகரின் போன்ற ஏகாதிபத்திய அரசிற்கு எதிரான போராட்டமும் புரட்சியும்  நமக்கு எடுத்தியம்புகின்றது.

புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கவும், புரட்சி சிந்தனைகளை விதைக்கவும் வலைத்தளங்கள் இன்று பெரும் பங்காற்றுகின்றன. மேடை போட்டு அரசியல் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து கூட்டம் கூட்டிய காலம் இன்று கடந்து விட்டது.

புறா காலில் செய்தி கட்டி தூது அனுப்பிய காலம் போய் இன்று குருவி (Twitter) விடும் தூது தான் சந்து பொந்திலிருக்கும்  மக்களையெல்லாம் சென்றடைகின்றது.

டிவிட்டர் (Twitter), பேஸ்புக் (Facebook), பிளாக் (Blog) போன்ற வலைத்தளங்கள் இன்று சமூக மாற்ற காரணிகளாக திகழ்கின்றன. சீனாவின் ஏகாதிபத்தியம் இதுப்போன்று கேள்விக் குள்ளாக்கப்படக் கூடாது என்பதற்காக சீன அரசு சில குறிப்பிட்ட வலைத்தளங்களை தடைசெய்ததை நாம் அறிவோம்.

வலைகளை இன்னும் ஆழத்தில் போடுங்கள் ! புரட்சி அரும்பட்டும் ! புதிய பாரதம் பூக்கட்டும் !

விடிந்தப் பிறகும் தூக்கம் ஏன்? The Dawn and the Slumber


விடிந்தப் பிறகும் தூக்கம் ஏன்?

 'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு', என்று பாடினான் பாரதி. வாணிபம் சார்பாக வெளி நாடுகளுக்கு சென்று வருவது நம் தமிழ் பாரம்பரியத்திற்கு ஒன்றும் புதிதல்ல. வெளி நாட்டையும் அவர்களின் கலாச்சாரத்தையும் கேலி கிண்டல் செய்வதற்கு பதிலாக வெளி உலகில் இருக்கின்ற தரமான இலக்கியங்களை, பழக்க வழக்கங்களை ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்த்து நம் கலாச்சார சூழலுக்கு ஏற்ற விதத்தில் மறு வாசிப்பு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

வெளி நாட்டின் இலக்கிய வளங்களை, வாழ்க்கை முறைகளை திறனாய்வு கண்ணோட்டத்தோடு பார்ப்பதை விட்டு விட்டு வெளி நாட்டு கலாச்சாரத்தினை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது அடி முட்டாள் தனமாகும்.

இந்தியா ஒரு வெப்ப நாடு என்பது யாவரும் அறிந்ததே. இந்த எரியும் வெப்பத்தில் கூட குளிர் கால வெளிநாட்டு ஆடைகளை (Over Coat, shoes, Jeans) நாகரிகத்தின் மொத்த அடையாளங்களாக ஏற்றுக்கொள்வது என்பது அடி முட்டாள் தனம் தானே.

இதேப் போன்று உணவு வகை தொடங்கி உறவு முறை வரை அன்னிய கலாச்சாரம் நம் அண்மையிலேயே வீடுக்கட்டி உல்லாசமாய் படுத்துக்கிடக்கின்றது. நாம் இந்த வீட்டின் வெளியே நிர்வாணமாய் விடிந்தப்பிறகும் தூங்கிக் கிடக்கின்றோம்.

பொழுது விடிந்து விட்டது. நாம் விழித்திருக்கப் போவது எப்போது?


குளிக்கலாம் வாங்க...Shower Bath

குளிக்கலாம் வாங்க...

அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. 'குடை வைத்திருந்ததால்  தப்பினேன். இல்லை என்றால் முதல் நாளே அலுவகத்திற்கு நனைந்து கொண்டுப் போயிருப்பேன்'.

'அதோ காரில் வேகமாக ஒருவன் வருகின்றான். இன்று அவ்வளவு தான். குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் இவன் என்மேல் சகதியை வாரி இறைக்கபோகின்றான். என் துணி யெல்லாம் கறைப்படியப் போகின்றது'.

'அப்பாடா! நல்ல வேளை அவன் மெதுவாக சென்றதால் தப்பித்தேன்'. 'இவ்வளவு நேரம் ஆனப்பிறகும் பஸ்சு இன்னும் வரவில்லையே'! 'என்றைக்கு சரியான நேரத்தில் வந்தது'?

'அடை மழை விட்டப்பாடு இல்லை. நல்ல வேளை மழையில நனையாம நிற்கிறேன்'.

'அதோ பஸ்சு ஒன்று வருகிறது'.

பஸ்சுக்குள் வேகமாக சென்று ஏறினான். தன் குடையை சுருக்கி வைத்தான். நல்ல வேளை தப்பினோம் என்று நினைத்துக்கொண்டு பெருமூச்சி விட்டான்.

சென்றடைய வேண்டிய இடம் வந்ததும் அவன் முழுமையாக நனைந்திருந்ததால் குடை விரிக்க மனமில்லாமலே நனைந்துக்கொண்டே அலுவலகம் சென்றான்.

அடை மழையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பஸ்சில் ஏரிய அவனுக்கு பஸ்சில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஸ்சின் மேற்கூரை இத்து திருப்பிடித்து இருந்தது. பொத்தல்கள் ஓட்டைகள் என்று அனைத்தும் அவனுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

அரசு நிர்வாகங்களில் ஓட்டை ஒட்டடை இருக்கும் வரை அரசு பேருந்துக்களுக்கு என்ன விதிவிலக்கு.

அன்புச் செய்கின்றாயா அதை செயலில் காட்டு...Love and my children

அன்புச் செய்கின்றாயா அதை செயலில் காட்டு...

 குடித்துவிட்டு ஆட்டம் போடும் தங்கள் தந்தையின் கொடுமையை தட்டிக்கேட்கும் விதமாக இரண்டு குழந்தைகள் நாகர்கோவில் எஸ்.பி யிடம் மனு ஒன்றை கொடுத்திருக்கும் செய்தி பரப்பரப்பை ஏற்படுத்திருக்கின்றது  (தினகரன் 11.01.2011).

குழந்தைகள் இன்று முதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் இளம்வயதிலிருந்தே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். 

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து நல்வழிக்காட்ட வேண்டிய பெற்றோர்களின் வாழ்வும் வார்த்தையும் குழந்தைகளை எளிதில் பாதித்து விடுகின்றன.

பள்ளிச்சென்று  கற்றுக்கொள்வதை விட வீட்டின் சூழல்கள் தான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் வாய்காலாக அமைகின்றன.

குடித்து விட்டு ஆட்டம் போடும் ஒரு தந்தை தன் மகனை அல்லது மகளை அன்புச்செய்கின்றார் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.

உன் குழந்தையை, பெற்றோரை அன்புச்செய்கின்றாயா அதை செயலில் காட்டு...

செயலில் காட்டப்படாத அன்பு உண்மையான அன்பு என்று புரிந்துக் கொள்ளப்படமாட்டாது.

காதல் என்பது....Never Fall In Love But Grow in Love!

காதல் என்பது....

உலகமெல்லாம் காதலர் தினத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. காதலர்கள் மட்டுமல்ல காதலர் தினத்தை முன்னிட்டு வியாபாரத்தை பெருக்க காத்திருக்கும் வியபாரிகளும், ஹோட்டல் முதலாளிகளும், பிரச்சினையை கிளப்பயிருக்கும் சங்பரிவார் அமைப்புகளும் காதலர் தினத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

காதல் என்பது மனிதர்களின் இயல்பான, நல்ல உணர்வு. ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து அல்லது ஒரு பெண் ஓர் ஆணை பார்த்து பழகுவதனால் அரும்பக்கூடிய இயல்பான உணர்வு. இது தன்னலமற்றது. நிபந்தனை இல்லாதது.

16 வயதிலிருந்து 22 வயது வரை அரும்பக்கூடியது காதல் அன்று அது இனக்கவர்ச்சி (infatuation) என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த வயதில் கூட ஓர் ஆண் பெண்ணால் கவரப்படுவதும், ஒரு பெண் ஓர் ஆணால் கவரப்படுவதும் இயல்பான இயற்கையான ஒன்று. ஆனால் இதனை காதல் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வயதில் ஏற்படுகின்ற இனக்கவர்ச்சியை காதல் என்று தவறுதலாக புரிந்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்கின்றவர்களின் வாழ்வு பாதியிலேயே முடிந்து விடுகின்றது.

பார்த்தவுடன் (திரைப்படங்களில் வருவது போல) அரும்புவது காதல் அல்ல அது கவர்ச்சி. காதல் என்பது நொடிப்பொழுதில் வருவதல்ல ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆழம் பெருவது.

உண்மை காதல் ஒருவரை நிர்பந்திக்காது (எ.கா. 'அவனிடம் நீ பேசக் கூடாது')

உண்மை காதல் வர்புறுத்தாது. (எ.கா. 'நீ என்னை காதலிக்க வில்லை என்றால் நான் செத்துப் போய் விடுவேன்')

உண்மை காதல் உடல், அழகு, நிறம், சமயம், சாதி, வசதி பார்க்காது.

உண்மை காதல் பெற்றோரை ஊனப்படுத்தாது.

உண்மை காதல் பெற்றோரை உதாசினப்படுத்தாது.

உண்மை காதல் புரிந்துக்கொள்ளும். (எ.கா. ' I understand You")

உண்மை காதல் ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும.; (எ.கா. 'உன்னால் முடியும';)

உண்மை காதல் எதையும் எதிர்பார்க்காது.

உண்மை காதல் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

உண்மை காதல் இளமையில் இனிமை பெறும் முதுமையில் முழுமை பெறும்.

உண்மை காதல் மனதால் இணைவது.

உண்மை காதல் தன்னை முழுமையாக தற்கையளிப்புச் செய்யும்.
Never Fall In Love But Grow in Love!


எந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கின்றதோ அது என் தாய் நாடு, Egypt and Revolution

எந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கின்றதோ அது என் தாய் நாடு

எகிப்திய பிரச்சினை என்று பார்ப்பதை விட எகிப்திய புரட்சி என்று பார்ப்பது தான் சிறந்ததாகும். 1789 ஆம் ஆண்டு நடந்த பிரஞ்சு புரட்சிக்கு பிறகு இத்தகைய பெரிய புரட்சிகள் 21 ஆம்; நூற்றாண்டு; நாகரிக உலகில் சாத்தியம் இல்லை என்று சொன்ன வரலாறு இன்று எகிப்திய புரட்சியின் ழூலமாக புரட்சிக்கு புதிய அர்த்தத்தை தருகின்றது.

சர்வாதிகாரி முபாரக் அரசின் அதிகார அரசியல் ஆயுள் முடிவதற்கு பெரும் பங்காற்றிய பெருமை எகிப்திய சமானிய மக்களையே சாரும். ஆயுதம் தாங்கி தான் புரட்சி செய்ய முடியும் என்ற எண்ணத்தை புரட்டி போட்டு விட்டது எகிப்திய புரட்சி. அடித்தட்டு மக்களின் எழுச்சியே இன்று புரட்சியாக வெடித்துள்ளது.

இந்திய மண்ணிலும் சர்வாதிகாரத்தால் அடக்கி ஆழும் அரசுகளுக்கு எகிப்திய புரட்சி ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்.

வெளிச்சத்திற்கு வாருங்கள்! Come and Shine

வெளிச்சத்திற்கு வாருங்கள்!

பகல் வேளையில் வெளியில் வர பயப்படுகின்ற மிருகங்கள் காடுகளில் இருளில் தான் வெளியே வந்த தங்கள் இரைகளை தேடிக்கொள்கின்றன.

இருளைக்கண்டு பயப்படுகின்ற மனிதர்களை பார்த்திருக்கின்றோம். ஆனால் வெளிச்சத்தை கண்டு பயப்படுகின்ற மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?

'வெளிச்சம் எனக்கு ஆகாது! வெளிச்சத்தில் வந்தால் என் உண்மை உருவம், என் சுயம் பிறருக்கு தெரிந்து விடும். நான் என்னையே பிறருக்கு வெளிப்படுத்த  பயப்படுகின்றேன்' என்று உணரக்கூடிய மனிதர்கள் இன்று பலர் உண்டு.

இத்தகைய உணர்வு நிலையைக் கொண்ட மனிதர்கள் தங்களையே சிறு கூண்டிற்குள் அடைத்துக்கொள்வார்கள். தங்களையே இழிவாக நினைப்பார்கள். பகலில் தான் தொலைத்த சுயத்தை, தான்மையை இருளில் தேடிக்கொண்டிருப்பார்கள்.

வெளிச்சத்திற்கு வாருங்கள்! நீங்கள் இருளின் மக்கள் அல்ல ஒளியின் மக்கள். உங்கள் சுயம் நல்லதே. நீங்கள் மாண்புடையவர்களே.

நீங்கள் உங்கள் நிறம், செல்வம், பட்டம், பதவி அல்ல. நீங்கள் ஒளியின் மக்கள். உங்கள் ஆளுமையே உங்களை ஆக்குகின்றது. இருளை வலிந்து பற்றிக்கொண்டிருப்பதை விட, இருளை பழிப்பதை விட, உண்மை ஒளியை உங்கள் உள்ளத்தில் ஏற்றுங்கள். இருள் தானாக அகன்று போகும். எனவே இருளைக் கண்டு பயம் வேண்டாம் வெளிச்சத்திற்கு வந்தாலே போதும்.

உணர்வுகளும் நானும், Feelings and Me


உணர்வுகளும் நானும்


மனிதர்களை ஆக்குவதே உணர்வுகள் தான். உணர்வுகளை மறுத்த சமயமும்; உறவுகளை வெறுத்த அருள்வாழ்வும் ஆன்மீகமாகாது.

அழுவாரோடு அழுவதும், மகிழ்வாரோடு மகிழ்வதுமே உணர்வின் சரியான சமமான வெளிப்பாடாகும்.

கோபம், வருத்தம், மகிழ்ச்சி, துயரம், அழுகை, கவலை, சிரிப்பு, வலி, துயரம், காதல், பாசம், இப்படியாக அனைத்து உணர்வுகளும் நல்லதே.

உணர்வுகள் ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது ஆபத்திற்கு அழைத்துச்செல்லும். உணர்வுகளை கட்டாயப்படுத்துவது என்பது ஆளுமை சிதைவுக்கு வழிவகுக்கும். 

உணர்வுகளை உள்ளுர உணர்வதே வாழ்வின் ஆழத்திற்கு அழைத்துச்செல்லும்.


எனக்கு கோபம் வருகின்றபோது என்ன செய்வது என்று தெரியாமலே தீய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு பதிலாக எனக்கு கோபம் வருகின்ற போது நான் கோபப்படுகின்றேன் என்ற உள்ளுர உணர்வு எனக்கு இருந்தாலே கோபம் சரியாக கையாளப்படும்.

இப்படி ஒவ்வொறு உணர்வுகளையும் உள்ளுர உணர்தலே சரியாக உணர்வுகளை கையாளுவதற்கான முறையாகும்.

உணர்வுகள் ஊமையானால் உறவுகள் பொய்த்துவிடும். உண்மைகளே உணர்வானால் உறவுகள் மொட்டவிழ்க்கும்.


நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! Corruption can Never be Compromised

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
 

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடுத்து அவர் கைது செய்த நிகழ்ச்சி பலருக்கு மகிழ்ச்சியாகவும் வேறு பலருக்கு வீழ்ச்சியாகவும் இருக்கின்றது.

ராசாவின் கைதை கொண்டாடியவர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.  வேறு சிலர் ராசாவின் கைதுக்கு பேரூந்துகளை கொளுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டும் துக்கம் அனுசரித்தார்கள்.

செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டப் போது மாணர்களின் பேரூந்து ஒன்று எரிக்கப்பட்டதும் அதற்கு பல மாணவிகள் பலியானதும் நாம் அறிந்ததே.

கர்னடாகாவில் எடியூரப்பாவின் மேல் கூறப்பட்ட ஊழல் குற்றங்களின் மேல் விசாரணை நடத்தலாம் என்று கூறிய ஆளுனருக்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருபவர்களை என்னவென்று சொல்ல. உறவுக்கு துணை போகலாம் ஊழலுக்கு துணை போகலாமா.

ராசா தலித் என்பதற்காக அவர் செய்த குற்றங்களை நியாயப்படுத்த முடியாது. விடுதலை சிறுத்தைகளின் ராசாவுக்கான ஆதரவு போராட்டங்கள் விடுதலை சிறுத்தைகளின் கொள்கையற்ற போக்கினை பளிச்சிடுகின்றன.

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து ராசாவை பாதுகாக்க அவருக்காக வாதாடிய, அல்லும் பகலும் போராடிய கட்சிகள் இன்று விழி பிதுங்கி நிற்கின்றன.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....

ராமனானாலும் ராவணனாலும் குற்றமெனில் அவன் தண்டனைக்கு உரியவனே...

தன்மான தங்க தமிழ் தலைவர்கள், Selfish Leadership

தன்மான தங்க தமிழ் தலைவர்கள்

இன்றைய உலக தலைவர்களின் அடையாளமே 'சுயநலம்' என்று சொன்னால் அது மிகையாகாது. தங்கத் தலைவர்களுக்கு உடல்நலம் குறைந்தால் கூட சுய நலம் குறைவதில்லை.

                      தமிழர்கள் ஈழத்தில் கொத்து கொத்தாய் கொல்லப்படும் போது டெல்லி பயணிக்காது கடிதத்தில் பயணித்த தமிழ் தலைவர், நேற்று தமிழ் மீன்வர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்படும் போது கடிதத்தில் மட்டும் டெல்லி சென்ற தலைவர் இன்று தொகுதி பங்கீடு என்று வரும் போது உடல்நலம் குறைந்தால் கூட டெல்லி செல்வதை சுயநலம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.

                தமிழர்களின் உணர்வுகளில் பங்குக் கொள்ளாத தலைவர்கள் தமிழர்களுக்கு தலைவர்களாய் இருப்பதற்கு தகுதி கிடையாது.

இவர்களே நம் தங்க தமிழ் தன்மான தலைவர்கள்...

இனம் கண்டு கொள்ளுங்கள் இவர்களை!

நாம் ஓர் தமிழ் இனம் ஒன்றிணையுங்கள்!