பள்ளிச்செல்லும் குழந்தைகள் புத்தக சுமையை மட்டுமல்லாமல் பெற்றோரின் கனவுகளையும் தம் கனவுகளையும் சுமந்துச்செல்கின்றனர். சாலை விபத்துக்கள் குழந்தைகளின் கனவுகளை மட்டுமல்ல ஒரு தேசத்தில் கனவுகளையே சிதைக்கின்றன.
ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் காணும் சாலை விபத்துக்கள் குழந்தைகளை நரபலி கேட்பது ஏன்?
யாரை பழிச்சொல்லுவது? பள்ளி நிர்வாகத்தையா? வீட்டு பக்கத்திலேயே பள்ளிகள் இருந்தும் தூரம் சென்று படித்தால் தான் படிப்பு ஏறும் என்று எண்ணும் பெற்றோர்களையா? பள்ளம் மேடு சாலைகளை சரிபார்க்காமல் இருக்கும் அரசு துறையினரையா? பள்ளி வாகனங்களை சரியாமல் பராமரிக்காமல் ஓட்டும் வாகன ஓட்டுநர்களையா? யாரை குறைச்சொல்லுவது? யாரை பழிச்சொல்லுவது? என்பதில் ஆர்வம் காட்ட வேண்டாம்.
மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்தே நாம் நம் குழந்தைகளை நரபலி கொடுக்கின்றோம்.