அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

SMART திறனாய்வு

உளவியல் அறிஞர்கள் SMART திறனாய்வு மூலமாக நமக்கு விளக்கிக் கூறுவர். இதனையே நாம் இங்குத் தெளிவாக நோக்குவோம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருதுவாக்கு

1. - S = Specific அறுதியிட்டு குறிப்பிடக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு மைய புள்ளியை நோக்கியதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக 'நான் மேல்படிப்பு படிக்க வேண்டும்' என்று தீர்மானித்தேனென்றால் அது மிகவும் மேலோட்டமாக இருக்கின்றது. நான் என்ன பாடத்தில் மேல் படிப்பு படிக்க விரும்புகின்றேன் என்று அறுதியிட்டுக் குறிப்பிடவில்லை. எனவே குழப்பம் நீடிக்க வாய்ப்பு இருக்கின்றது.

2.  M = Measurable - அளவீட்டுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், உங்கள் இலக்கினுடைய ஆழத்தையும் அகலத்தையும் அதன் அளவையும் சரியாகத் தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானிக்காத விருது வாக்கு ஆழம் தெரியாமல் காலைப் போட்டதற்கு ஒப்பாகும்.

3. A = Attainable (Achievable) - மனித சக்தியால், குறிப்பாக உங்களால் இயலக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும், 'சூரியனைச் சிறைபிடிப்பேன்' என்பன போன்ற தண்ணீரில் எழுதுகின்ற விருது வாக்குகள் வெற்றிபெற்றுத் தரமுடியாது.

4. R = Realistic (Relevant) - உண்மைத்தன்மையுள்ளதாய், தொடர்புடையதாய், நம்பகதன்மையுள்ளதாய் இருக்க வேண்டும். ஒரு இலக்கை அடைவதற்கு என்னென்ன வாய்ப்புகளும் ஆதாரங்களும் கைவசம் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே விருது வாக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவன் காய்கறி வியாபாரம் செய்து வாழ்வின் நிறைவை அடைய தீர்மானித்தான் என்றால் காய்கறிகளைக் கொள்முதல் செய்வதற்கான பொருளாதாரம், அதனை வைத்து விற்பனை செய்வதற்குத் தேவைப்படுகின்ற இட வசதிகள் போன்றவை அவனிடம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்தே அவனுடைய வெற்றி அமையும்.

5. T = Time bound -  என்னுடைய இலக்கை அடைய நான் எடுத்துக்கொள்ளும் காலவரையறையினை குறிக்கின்றது. ஒரு செயலை செய்யப் போகின்றேன் என்றால் என்றைக்கு அல்லது எத்தனை மணிக்கு நான் அந்த வேலையைத் தொடங்க அல்லது முடிக்க தீர்மானித்திருக்கின்றேன் என்பதை இது குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக 'நான் காலையிலேயே எழும்பி உடற்பயிற்சி செய்வேன்' என்ற விருது வாக்கை எடுத்திருப்பேன் என்றால் அதிலிருந்து எளிதாக நான் அடிபிறழ வாய்ப்புள்ளது. காரணம் காலை என்று குறிப்பிட்டேனே தவிர சரியாக கால அளவை நான் குறிப்பிடவில்லை. எனவே 'நான் தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை உடற்பயிற்சி செய்வேன்' என்று தீர்மானிப்பதே காலவரையறைக்கான இலக்கணமாகும்.