எகிப்து புரட்சியும் இளைய இணையமும்
இணையத்தினை இளைஞர்கள் தவறுதலாக மட்டுமே பயன் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. சமீபத்தில் 30 ஆண்டுகாலமாக 1981 ல் இருந்து கொடுங்கோலாட்சி செய்து வந்த ஹாசினி முபாரக்கின் ஆட்சியை புரட்சி செய்து புரட்டிப் போட்டிருக்கின்றது இளைய இணையம்.
பேஸ் புக் (Facebook) எனும் சமூக தொடர்பு வலைத்தளம் எகிப்தின் தலை எழுத்தையே மாற்றியிருக்கின்றது. எகிப்தின் 8,00,000 இளைஞர்கள் இந்த சமூக தொடர்பு வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தங்களின் கருத்துக்களை, அதிர்ப்திகளை பதிவுச் செய்கின்றனர். ஒத்தக் கருத்துடையவர்கள் சில ஆயிரம் பேர் இணைந்து வலைக்குழுக்களாக (groups) தங்களை இணைத்துக்கொள்கின்றார்கள். காரச்சாரமான விவாதங்களும் (group Chat) புதிய புரட்சிகர கருத்துருவாக்கங்களும் பரவலாக்கம் செய்யப்படுகின்றன. அரசு நடத்தும் கொடுமைகளும், கொலைகளும், கட்டவிழ்த்து விடுகின்ற வன்முறை காட்சிகளும் பரிமாறப்படுகின்றன. இவை இளைய சமூதாயத்தினர் மனதில் தாக்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனால் வலைக்குழுக்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் தெருக்களில் இறங்கி போராட துணிந்தார்கள். இதனாலையே எகிப்து புரட்சி அரும்ப தொடங்கியது.
எகிப்து புரட்சியின் வெற்றியை பெற்று தந்த பேஸ்புக் (Facebook) வலைத்தளத்தை பாராட்டும் பொருட்டு ஜமால் இப்ராகிம் என்ற மனிதர் தன் மகளுக்கு பேஸ்புக் ஜமால் இப்ராகிம் என்று பெயர் சூட்டியிருக்கின்றார்.