அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

அணையும் அரசியலும் - கொஞ்சம் யோசிங்கப்பா...




முல்லைப்பெரியார் அணை தொடர்பாக பல ஆண்டுக்காலமாகவே இரு மாநிலங்களுக்கு இடையே இழுப்பறி நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இச்சூழலில இந்த பிரச்சினை இப்போது வெடிக்க காரணம் என்ன? கொஞ்சம் யோசிங்கப்பா....இது தான் அரசியல் விளையாட்டு என்றுச் சொல்வது.

 கூடன்குளம் பிரச்சினை தமிழகத்தில் ஒரு தாக்கத்தையும் இந்திய அளவில் பல மாநிலங்களின் அணுஉலைப்பற்றிய சிந்தனையையும் மாற்றியமைத்தது. இதனால் அதிர்ந்து இல்லை இல்லை அரண்டு தான் போனது மத்திய அரசு. இதனால் பல கோடிகள் கைபுரளும் சூழல் தடைப்படும் என்பதை அறிந்த மத்திய அரசு கொளுத்திப்போட்ட தீக்குச்சி தான் முல்லைப் பெரியார் அணைத் தொடர்புடைய பிரச்சினை. இன்று மாநிலங்களுக்கு இடையேயான குடும்ப உறவை முறித்து விட்டு குளிர் காய்கிறது. குளிர் காலத்தில் டெல்லிக்கு இது தேவைத்தான்.

இன்று இது இந்திய ஒருமைப்பாட்டிற்கே பங்கம் விளைவிக்கும் தன்மையில் பற்றி எரிகின்றது.

இதனால் கூடன்குளம் எதிர்ப்பு வலுவிழந்து விட்டது என்ற தோற்றத்தை அனைத்து ஊடகங்களும் ஊதுகின்றன. 

காங்கிரசு அரசு ஏன் முல்லைப் பெரியார் பிரச்சினையை கிளப்ப வேண்டும்?


கேரள அரசு, "முல்லைப் பெரியார் அணை பழமையானது நிலநடுக்கம் வந்தால் இடிந்து போகும். பெரும் ஆபத்து வரும்'.


தமிழக அரசு, "முல்லை பெரியார் அணை பாதுகாப்பாகத்தான் இருக்கின்றது".


அணு எதிர்ப்பாளர்கள் "கூடன்குளத்தில் அமைந்திருக்கின்ற அணுஉலை சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்ற இடர்பாடுகளால் தாக்கப்பட்டு பெறும் ஆபத்தை விளைவிக்கும்".

இந்திய அரசு, "அணுஉலை மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றது".

இப்படியாக அணுஉலை பாதுகாப்பும் முல்லைப்பெரியார் அணை பாதுகாப்பும் தொடர்புபடுத்தப்பட்டு, நீங்கள் (தமிழர்கள்) "அணை பாதுகாப்பாக இருக்கின்றது" என்கின்றீர்கள். ஆனால் "அணு உலையும் பாதுகாப்பாக இருக்கின்றது" என்று  நாங்கள் சொன்னால் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கின்றீர்கள்" என்று மறைமுகமாக கேள்விகளை எழுப்புகின்றது.

கொஞ்சம் யோசிங்கப்பா....

காங்கிரசு அரசின் கில்லாடி தனத்திற்கு நீங்க எத்தனை மதிப்பெண் போடுவீங்க?