தோள்துண்டு அரசியல்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்க வேண்டும். கொள்கையில்லா அரசியல் கொத்தடிமை அரசியல், பச்சோந்தி அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்.
சுயமரியாதை பேசிய கட்சிகள் இன்று சுயநலத்தை மட்டுமே கொள்கையாகவும் குடும்பத்தை மட்டுமே வேட்பாளராகவும் கொண்டிருக்கின்றன.
போன தேர்தலின் போது அடிப்பிடி, வெட்டுக்குத்து சண்டை போட்டுக்கொண்ட கட்சிதலைவர்கள் இந்த தேர்தலின் போது கைகுலுக்கி, கட்டிப்பிடித்து புகைப்படத்திற்கு சிரித்தப்படியே காட்சியளிப்பது கொள்கையற்ற அரசியலின் ஒட்டுமொத்த கோர முகமாக இருக்கின்றது.
தோள்துண்டின் நிறத்தினை மாற்றிக்கொள்ளமல் இருப்பதையே தனது கொள்கையாக கொண்டிருக்கின்ற அரசியல் தலைவர்கள் தன் தோலின் நிறத்தை திரும்ப திரும்ப மாற்றி கொண்டிருப்பது அவர்களின் பச்சோந்தி தனத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
பச்சோந்திகளை அடையாளப்படுத்துங்கள் ! பச்சை தமிழனாய் வாழ்ந்திடுங்கள் !