குளிக்கலாம் வாங்க...

'அதோ காரில் வேகமாக ஒருவன் வருகின்றான். இன்று அவ்வளவு தான். குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலையில் செல்லும் இவன் என்மேல் சகதியை வாரி இறைக்கபோகின்றான். என் துணி யெல்லாம் கறைப்படியப் போகின்றது'.
'அப்பாடா! நல்ல வேளை அவன் மெதுவாக சென்றதால் தப்பித்தேன்'. 'இவ்வளவு நேரம் ஆனப்பிறகும் பஸ்சு இன்னும் வரவில்லையே'! 'என்றைக்கு சரியான நேரத்தில் வந்தது'?
'அடை மழை விட்டப்பாடு இல்லை. நல்ல வேளை மழையில நனையாம நிற்கிறேன்'.
'அதோ பஸ்சு ஒன்று வருகிறது'.
பஸ்சுக்குள் வேகமாக சென்று ஏறினான். தன் குடையை சுருக்கி வைத்தான். நல்ல வேளை தப்பினோம் என்று நினைத்துக்கொண்டு பெருமூச்சி விட்டான்.
சென்றடைய வேண்டிய இடம் வந்ததும் அவன் முழுமையாக நனைந்திருந்ததால் குடை விரிக்க மனமில்லாமலே நனைந்துக்கொண்டே அலுவலகம் சென்றான்.
அடை மழையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பஸ்சில் ஏரிய அவனுக்கு பஸ்சில் ஏமாற்றமே மிஞ்சியது.
பஸ்சின் மேற்கூரை இத்து திருப்பிடித்து இருந்தது. பொத்தல்கள் ஓட்டைகள் என்று அனைத்தும் அவனுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.
அரசு நிர்வாகங்களில் ஓட்டை ஒட்டடை இருக்கும் வரை அரசு பேருந்துக்களுக்கு என்ன விதிவிலக்கு.