அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

காதல் என்பது....Never Fall In Love But Grow in Love!

காதல் என்பது....

உலகமெல்லாம் காதலர் தினத்தை எதிர்நோக்கியிருக்கின்றன. காதலர்கள் மட்டுமல்ல காதலர் தினத்தை முன்னிட்டு வியாபாரத்தை பெருக்க காத்திருக்கும் வியபாரிகளும், ஹோட்டல் முதலாளிகளும், பிரச்சினையை கிளப்பயிருக்கும் சங்பரிவார் அமைப்புகளும் காதலர் தினத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

காதல் என்பது மனிதர்களின் இயல்பான, நல்ல உணர்வு. ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து அல்லது ஒரு பெண் ஓர் ஆணை பார்த்து பழகுவதனால் அரும்பக்கூடிய இயல்பான உணர்வு. இது தன்னலமற்றது. நிபந்தனை இல்லாதது.

16 வயதிலிருந்து 22 வயது வரை அரும்பக்கூடியது காதல் அன்று அது இனக்கவர்ச்சி (infatuation) என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த வயதில் கூட ஓர் ஆண் பெண்ணால் கவரப்படுவதும், ஒரு பெண் ஓர் ஆணால் கவரப்படுவதும் இயல்பான இயற்கையான ஒன்று. ஆனால் இதனை காதல் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வயதில் ஏற்படுகின்ற இனக்கவர்ச்சியை காதல் என்று தவறுதலாக புரிந்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்கின்றவர்களின் வாழ்வு பாதியிலேயே முடிந்து விடுகின்றது.

பார்த்தவுடன் (திரைப்படங்களில் வருவது போல) அரும்புவது காதல் அல்ல அது கவர்ச்சி. காதல் என்பது நொடிப்பொழுதில் வருவதல்ல ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆழம் பெருவது.

உண்மை காதல் ஒருவரை நிர்பந்திக்காது (எ.கா. 'அவனிடம் நீ பேசக் கூடாது')

உண்மை காதல் வர்புறுத்தாது. (எ.கா. 'நீ என்னை காதலிக்க வில்லை என்றால் நான் செத்துப் போய் விடுவேன்')

உண்மை காதல் உடல், அழகு, நிறம், சமயம், சாதி, வசதி பார்க்காது.

உண்மை காதல் பெற்றோரை ஊனப்படுத்தாது.

உண்மை காதல் பெற்றோரை உதாசினப்படுத்தாது.

உண்மை காதல் புரிந்துக்கொள்ளும். (எ.கா. ' I understand You")

உண்மை காதல் ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும.; (எ.கா. 'உன்னால் முடியும';)

உண்மை காதல் எதையும் எதிர்பார்க்காது.

உண்மை காதல் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

உண்மை காதல் இளமையில் இனிமை பெறும் முதுமையில் முழுமை பெறும்.

உண்மை காதல் மனதால் இணைவது.

உண்மை காதல் தன்னை முழுமையாக தற்கையளிப்புச் செய்யும்.
Never Fall In Love But Grow in Love!