அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

உயிர், Life and Love

உயிர்
முப்பத்தியாறு வருடங்களுக்கு முன் மும்பையின் கே.யி.எம் மருத்துவமனையில் பணிபுரிந்தவர் அருணா. அதே மருத்துவமனையில் பணிபுரிந்த சோகன்லால் பாரத் வால்மீகி என்பவனால் நாய் சங்கிலியால் கட்டி பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு  வன்மையாக தாக்கப்பட்டு நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்த நிலையில் முப்பத்தியாறு வருடங்களாக சுயநினைவு இழந்து படுத்தப்படுக்கையாக அதே மருத்துவமனையில் கிடக்கிறாள் அருணா.

அருணாவை கருணை கொலை செய்ய நீதிமன்றம் தீர்ப்பிட வேண்டும் என்று பிரபல பெண் எழுத்தாளர் பிங்கி விராணி மனுதாக்கல் செய்திருந்தார். அருணா தாவர நிலையிலேயே இருக்கின்றாள் என்பது இவரது வாதம். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுப்படி செய்து உயிரின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியது.

உயிர் என்பது உலக அதிசயம், கடவுளின் இருத்தலை ஆழமாக மெய்பிக்கும் அர்ப்புதம். உலக உயிரிகளை எல்லாம் ஒரே சங்கிலியில், சமநீதி சக்கரத்தில் இணைத்து வாழ்வளிக்கும் உத்திரவாதம்.

இந்த உயிர் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகின்றது. இந்த உயிரை பாதுகாக்கவும் பராமரிக்கவும் தான் மனிதன் படைக்கப்பட்டடிருக்கின்றான். போர், வன்முறை, கொலை போன்ற மனிதமற்ற செயல்களால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு உயிர் ஊதி பெருக்க மற்றொரு உயிர் அழிக்கப்படலாம் என்ற தத்துவம் உயிருக்கு உலை வைக்கின்றது.

கருணை என்பது மனிதனின் பல பண்பான  குணங்களில் ஒன்று. கருணை அன்பிலிருந்து ஊற்றெடுக்கின்றது. கருணை கொல்லாது மாறாக வாழ்விக்கும் ஆற்றல் கொண்டது. இன்று கருணை போன்ற வார்த்தைகளின் உள்ளர்த்தம் திரிக்கப்படுகின்றது. கருணை கொலையும் செய்யும் என்று மெய்பிக்கப்படுகின்றது.

கருணை என்பதே கிழங்கு வகைகளில் ஒன்று என்றாகி விட்டது என்ற அர்த்தத்தில் கிண்டலடிப்பார் புதுமை பித்தன்.

கருணையின் உண்மை பொருள் அறிவோம் ! உயிர்க்கு உத்திரவாதம் தருவோம் !