அயோத்திய பிரச்சினைக்கு அலகபாத் உயர்நீதி மன்றம் கொடுத்த நாட்டாமைத் தீர்ப்பு வியப்பையும் நீதிமன்றங்களின் சிரிப்பு கதாப்பாத்திரத்தையும் சித்தரிக்கின்றது. பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக தீர்ப்பா அல்லது ஞாயம், நீதி காக்கப்படவேண்டும் என்பதற்காக தீர்ப்பா? இன்று அயோத்திய பிரச்சினையில் சமரசம் செய்துக்கொண்ட நீதித்துறை ஆதாம் பாலம் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கும் இதுப்போன்ற நாட்டாமை தீர்ப்பை வழங்கக்கூடிய அபாயம் உள்ளது. அயோத்திய பிரச்சினைக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரச்சினைகளுக்கான முடிவு அல்ல பிரச்சினைகளின் தொடக்கம்.