அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Colour, நிறம்

நிறம்

தொடக்க வரலாற்றிலே உடல் வலிமை உலகை ஆண்டிருக்கின்றது. பின்பு அறிவு படைத்த அறிஞர்களுக்கு இவ்வுலகம் மண்டியிட்டிருக்கின்றது. நாளடைவில் பணம் படைத்தவர்களுக்கு அடிமையாய் இருந்திருக்கின்றது இவ்வுலகம்.

ஒவ்வொரு காலகட்டத்திலேயும் ஒவ்வொரு ஆதிக்க தன்மையினால் உலகம் சூரையாடப்பட்டிருக்கின்றது.



இக்காலக்கட்டத்திலே நிறம் கூட மனிதனை ஆண்டிருக்கின்றது, ஆளுகின்றது என்பதை முன் வைக்க விரும்புகின்றேன்.



- கருப்பு நிறம் கொண்டவர்களை கருப்பர்கள், மிருகங்களுக்கு ஒப்பானவர்கள், அடிமைகள் என்று வெறுத்து ஒதுக்கியது வெள்ளைத்தோல்.



- சிவப்பு நிறம் கொண்ட சிவப்பு இந்தியர்களை ஓரங்கட்டி, கொன்று தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டது ஆதிக்க வந்தேறிகள்.



- மஞ்சள் நிற இனம் மட்டுமே உலகை ஆளும் என்ற கோணத்தில் மற்றவர்களை எல்லாம் கொன்று குவித்தது பாசிசம்.



- வெள்ளை நிற இனமே இறைவனால் படைக்கப்பட்டது. எனவே நாங்கள்தான் உலகை ஆளுவோம் என்று கூவிக்கொண்டு காலணி ஆதிக்கத்தை விதைத்தது ஆதிக்க வர்க்கம்.



கண்களைத் திறந்து பார்க்கும்போது வெள்ளை நிறமாய் அல்லது சிவப்பு நிறமாய் அல்லது கருப்பு நிறமாய், அல்லது மஞ்சள் நிறமாய் மட்டும் உலகம் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?



ஒவ்வொரு புவியியல் அமைப்பிற்கேற்ப மனிதன் நிறம் பெறுகின்றான். இதில் ஆதிக்க நிறம் அடிமை நிறமென யார்தான் தீர்மானம் செய்தது?



தமிழன் கருப்பாகத்தான் இருப்பான், இது இயல்பான உண்மை. தமிழ்ச் சமுதாயத்தில் வெள்ளைவெளேரென ஒருவன் பிற்பபாரெனில் அவனை தமிழ் சமூகம் விகாரமாகதானே பார்க்கும். விகாரமாக பார்க்கப்படும் ஒன்றுக்கு நாம் ஏன் ஆசைப்படுகின்றோம்.



தமிழுக்கு 'ழ'கரம் அழகு, தமிழருக்கு கருப்பழகு.



அன்னிய மோகங்கள் மேகங்களாக நம்மை மூடும்போது நாம் பல நேரங்களில் நம்மையே விற்று விடுகின்றோம். வெள்ளையர்கள் தன் நிறத்தை கருப்பாகிக் கொள்ள இங்கு வருகின்றார். நாம் நம் நிறத்தினை மாற்றியமைக்க நம் தோலை நாமே பலவகையான பவுடர் பூசி வெளிரச் செய்கின்றோம்.



உலக போர்களும், உளவியல் மாற்றங்களும் நிகழ்வதற்கு காரணம் நிறங்களை ஆதிக்க நிறமென்றும் அடிமை நிறமென்றும் பகுத்துப் பார்த்ததினால் தான். நிறங்களை தொகுத்து பாருங்கள் கண்முன்னே வானவில் தோன்றும்.