அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Tradition, வழிமரபு

வழிமரபு

ஒவ்வொறு மனிதனும் தான் பிறக்கின்ற போது வெறும் மேனியாக பிறந்தாலும் தன் உணர்வுயனிலும் உடலிலும்> உயிரிலும் தன் வழி மலபினரின் மூதாதையரின் சாயலை செல்வமாக தாங்கி வருகின்றான்.
'நீ அப்படியே உன் அப்பா போலவே இருக்கின்றாய்'. 'உனக்கு அப்படியே உன் தாத்தா குணம்'. என்றெல்லாம் நம் வழி மரபினரின் சாயலை நம்மேல் ஏற்றிக் கூறுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். நல்ல வழிமரபில் வந்த பிள்ளைகள் நல்ல பழக்க வழக்கங்களில் நல்ல குணநலன்களில் வளர்கின்றனர். இதில் விதிவிலக்குகளும் உண்டு.

வழிமரபு என்பது நமக்கு அடையாளத்தை கொடுக்கின்றது. நமக்கு நம் முகவரியை தருகின்றது.  நம் வழிமரபினர் கொண்டிருந்த நம்பிக்கையை> உறுதிப்பாட்டை> திறமையை> தியாக வீர பண்பாட்டு கலாச்சாரத்தை நமக்கு கொடயாக ஒருவர் வழி இன்னொருவருக்கு இன்று நமக்கு விட்டுசென்றிருக்கின்றது.

உலகில் வாழுகின்ற ஒவ்வொருவரும் இத்தகைய வழியில் பிறந்தவர்களே. எனவே ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட வழிமரபு வந்த பொக்கிசங்களை> கொடைகளை அடுத்த மரபிற்கு சிதையாமல் சிந்தாமல் காலத்தின் அறிகுறிகளுக்கேற்ப கொண்டுச்சேர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.