அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Life education, வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி
     ஒரு காலகட்டத்தில் மனிதனை பண்படுத்த செம்மைப்படுத்த கல்வியின் கட்டாயத் தேவை பறைசாற்றப்பட்டது. ஆங்கிலேயர்களின் கல்வி முறையினால் இந்தியர்கள் அறிவுத் தெளிவு பெற்றார்கள். அறிவியலும; கணிதமும் செழித்து வளர்ந்தது. கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. அரசாட்சி மாறி மக்களாட்சி மலர்ந்தது. கலப்பை பிடித்த கரங்கள் காவியங்கள் படைத்தன. இந்தியாவின் அருமை பெருமை இமாலயம் தாண்டி பறந்தது.
இத்தனை மாற்றங்களை ஏற்படுத்திய கல்வி மனித வாழ்க்கையினை செப்பனிட தூண்டியதா என்றால் இல்லை. வாழ்க்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கல்வி அதன் நோக்கத்தை மறந்து எவ்வளவு சம்பாதிக்கலாம். எவ்வாறு வசதியாக வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளமுடியும் என்ற ரிதியிலே நேர்வழி காட்டாமல் குறுக்கு வழி காட்டும் ஜீம்பூம்பா மந்திரக் கோலாக காட்சியளிக்கின்றது.
இன்றைய கல்வி மனிதனை நவீன மிருகமாக்கியிருக்கின்றது. நான் எனது என்ற தாண்மையுணர்வை வளர்த்தெடுத்திருக்கி;ன்றது என்பதுதான் உண்மை.
நவீன முறையில் திருட்டும் நாகரிகம் என்ற பெயரில் அன்னிய மோகமும் நயவஞ்சக எண்ணத்தையும் வக்கிர யுத்திகளையும் புகுத்தும் ஊடகமாகவே இன்றைய கல்வி முறை அமைந்திருக்கி;ன்றது என்பது உள்ளக்கிடக்கையில் வலியை ஏற்படுத்துகின்றது.
     கற்றவன் ஆயிரம் கண்களுடையவன் என்ற வள்ளுவரின் கூற்று தலைகீழாகி உயரிய கல்வி கற்றவனே கயவாளி என்ற நிலை வலுத்திருக்கின்றது.
         வாழ்க்கையினை ஒரு அழைப்பாக பார்க்காமல் ஒரு பிழைப்பாக பார்க்கின்றது இன்றைய கல்வி முறை.
    இச்சூழலிலே மாற்று கல்வியின் தேவை பலரின் மனதில் உதித்திருக்கின்றது. தலையினை வீங்கவைக்கும் கல்வி முறை மாறி இதயத்தை விசாலப்படுத்தும் மாற்றுக்கல்வி முறை தேவைப்படுகின்றது.
மனிதனுக்கு வெளியே பயணம் செய்ய சொன்ன இன்றைய கல்வி முறை மாறி மனிதனுக்குள் பயணிக்கச் செய்யும் மாற்றுக் கல்வி வேண்டும்.
     வாழ்வில் கல்வி என்ற முறை மாறி வாழ்க்கையே கல்வியாக வேண்டும். எனவே வாழ்க்கை கல்வி வேண்டும்.

A white lie, பொய் பொம்மைகள்

பொய் பொம்மைகள்

        உண்மையே கடவுள் என கண்டார் காந்தியடிகள். உண்மைக்கு சான்று பகரவே வந்தேன் என்றார் இயேசு. 'உண்மையா அது என்ன?' என்ற கேள்வி இன்றும் கூட பதில் ஈட்டுத்தர இயலா கேள்வியாகவே உள்ளது.
     இன்று ஊனமான உண்மைகைள் உண்டு நிழல்களான நிஜங்கள் உண்டு.
ஒரு வாரத்தில் பெற்றிடுவீர் சிகப்பழுகு என்கிறது ஒரு விளம்பரம். இந்த ஆடையினை அணிந்தால்தான் நீங்கள் முழுமையான நபர் (pநசகநஉவ அயn) என்கிறது இன்னொரு விளம்பரம்.
      ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் ஒவ்வொரு விளம்பரமும் 'பொய்' என்று தெரியும். எனினும் பொய்யை மெய், மெய் என்று அழுத்தம் கூட்டி மீண்டும் மீண்டும் காதில் ஓதுவதால் பொய்கள் மெய்களாகின்றன. நிழல்கள் நிஜங்களாகின்றன.
      இதனைத்தான் விளையாட்டாக சொல்வார்கள். ஒருமுறை திருவள்ளுவர் தோன்றி திருக்குறள் பாடத்திற்கு தேர்வு எழுதப் போனாராம். பாவம் திருவள்ளுவர் தேர்வில் தோற்றுப் போனாராம், காரணம் கேட்டதற்கு கோனார் தமிழ் உரையின் படி விடையளித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற பதில் வந்தது.
      விளம்பரம் நம்மை ஆள்கிறது, அழிக்கிறது. உண்மைக்கு எதற்கு பொய்யான விளம்பரங்கள். மலர் மணக்கும் என்று விளம்பரப்படுத்த தேவையில்லை.
மாம்பழம் கசக்கும் என்று நம்ப வைக்கத்தான் விளம்பரம் தேவைப்படுகின்றது.
       இப்படியே போனால் ஒருவனை பார்த்து மற்றொருவன் நீ ஒரு பொம்மை, பொம்மை என்று அவன் காதில் அழுத்தமாக மீண்டும் மீண்டும் கூறி அவனை தலையாட்டி பொம்மையாக மாற்ற்p பிணை கைதியாக்குகின்றான்.
மெய்யான மனிதன் பொய்யானது எப்போது?