அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

குடும்ப வாழ்வு ஓர் ஆன்மீகம், Family a spirituality

குடும்ப வாழ்வு ஓர் ஆன்மீகம்



நான் சந்தித்த அந்தக் குடும்பம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திருந்தது. தொடக்க காலக்கட்டங்களில் அந்தக் குடும்பம் மகிழ்சியாக தான் இருந்திருந்தது. பல கனவுகளுடன் பல எதிர்பார்ப்புகளோடு தொடங்கிய குடும்ப வாழ்வு சிறிது காலத்திலேயே தவிடு பொடியானது. அவர்களுக்கு பிறந்த குழந்தை முதுகெலும்பில்லாமல் பிறந்ததினால் அதிர்ச்தியில் உரைந்து போய் விட்டது குடும்பம். ஆயினும் தன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தியாக உள்ளத்தோடு 20 ஆண்டுகள் ஆனப்பிறகும் முதுகெலும்பே இல்லாத அந்த குழந்தைக்கு முதுகெலும்பாக இருந்து செயலாற்றுகின்றது அக்குடும்பம்.


இவ்வாறு ஒருவர் மற்றவருக்கு தியாகம் செய்து வளர்த்து வருகின்ற போக்கு ஒருபுறம் இருக்க மறுபுறம் இதயமே இல்லாமல் குடும்பங்கள் சிதைந்து கிடப்பதை பார்க்க முடிகின்றது.

'கரம் பிடித்து நடத்திச்சென்றாள் என் தாய் நானும் இன்று கரம் பிடித்து நடத்திச் செல்கின்றேன் அவளை முதியோர் இல்லம் நோக்கி'' என்னும் பதுக் கவிதையின் வரிகளுக்கு இணங்க இன்று குடும்பங்கள் வாழ்விழந்து உருவிழந்து கடப்பதை காண முடிகின்றது.

இன்று நீதி மன்றங்களிலே குவிந்துக் கிடக்கும் விவாகரத்து வழக்குகளே இதற்கு சான்று. வெளிநாடுகளில ;தலைவிரித்தாடிய இந்த நோய் இன்று நம் மக்களையும் பிடித்து ஆட்டுகின்றதே என்பது தான் கவலையான ஒன்று. இதனால் குடும்பம் என்னும் கதம்பம் பொருள் இழந்துக் கிடக்கின்றது. கணவன் மனைவி மாமியார் மருமகள் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான உறவு முறிவுகள் காணக்கிடப்பதை தினம் தினம் நாம் நம் குடும்பங்களிலேயே அரங்கேருகின்றது. இதனால் மகிழ்ச்சி, நிம்மதி, நிறைவு இல்லாமல் பலர் தனிமரமாய் நிற்பதை காணமுடிகின்றது.

குடும்ப வாழ்வில் ஒருவர் மற்றவரை நிறைவுச் செய்பவராக இருக்க வேண்டும். ஒருவரின் குறைகளையே சுட்டிக்காட்டிக் கொண்டு இருக்காமல் அவர்களின் நிறைகளை நல்லக்குணங்களை சுட்டிக்காட்ட நாம் அழைக்கப்படுகின்றோம்.

பாராட்ட கற்றுக்கொள்ளும் குடும்பங்கள் நல்லக் குடும்பங்களாக வாழ்கின்றது.

அன்பு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

குழந்தைகளை பிறரோடு ஒப்பிட்டு பேசாதிருங்கள்.

உங்கள் விருப்பங்களை குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள்.

குடும்ப செபம், கூடி உண்தல் குடும்ப வாழ்வை ஒருங்கிணைக்கும்.

நல்லக் குடுங்களாக நீங்களே திருக்குடும்பங்காளக வாழ வாழ்த்துகின்றேன்.



கிறிஸ்து பிறப்பு, Christmas

கிறிஸ்து பிறப்பு

பக்தன் ஒருவன் கடற்கரை வழியாக நடந்துச்செல்கின்றான். திருடர்கள் அவனை தாக்கிவி;ட்டு அவனிடமுள்ள பணத்தை சூறையாடிவிட்டு செல்கின்றனர். பக்தன் பதருகின்றான். நான் வணங்கும் கடவுள் என்னை கைவிட்டு விட்டாரே என்று அழுதுப்புலம்புகின்றான். குரல் ஒன்று கேட்டது. உன்பின்னே என்ன பார்க்கின்றாய்? பக்தன் சொன்னான் என்னுடைய இரண்டு கால்தடங்கள். கடவுள் சொன்னார், 'அவை உன்னுடையவை அல்ல உன்னை தூக்கிக்கொண்டு செல்லும் என்னுடையவை'. அன்றிலிருந்தே அந்த பக்தன் உணர்ந்தான் நான் வணங்கும் கடவுள் என்னைவிட்டு பிரிவதுமில்லை என்னை கைவிடுவதுமில்லை.

'வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிக்கொண்டார்' என்னும் கடவுளின் உடனிருப்பின் நற்செய்தி இன்று நம்மையும் பிறரோடு உடனிருக்க உறவாட அழைக்கின்றது. நம் இல்லங்களில், நம் இதயங்களில் பிறந்திருக்கும் இறைவன் கல்லான இதயத்தை எடுத்து விட்டு சதையாலான இதயத்தை அருளுகின்றார். நம்மோடு நம் துன்பங்களில் பங்குப்பெறுகின்றார். நம்மில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றார். இந்த மாற்றம் நம்மை நம் குழந்தைகளோடு உறவினர்களோடு உடனிருக்க அழைக்கின்றது. அவர்களின் மகிழ்ச்சியில் வேதனையில் பங்குக்கொள்ள அழைக்கின்றது.

குடும்பத்தோடு உடனிருந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்குக்கொள்ளாமல் குடித்துவிட்டு சுற்றுகின்றப்போது கிறிஸ்துப் பிறப்பு அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடுகின்றது.

நம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கிறிஸ்துப் பிறப்பு கொண்டாட சில பிரச்சினையினால் துன்பப்பட்டுக்கிடக்கும் போது அவர்களுடம் உடனிருந்து அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து அவர்களையும் மகிழ்சியில் பங்குப்பெறச் செய்யும் போது கிறிஸ்துப் பிறப்பு அர்த்தமடைகின்றது.

வெளி ஊர்களிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் பிள்ளைகள் பெற்றோரோடு இருந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்குக்கொள்ளும் போது, கணவன்கள் மனைவி, குழந்தைகளோடு உடனிருக்கும் போது கிறிஸ்துப்பிறப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகின்றது.

எனவே கிறிஸ்துப் பிறப்பு என்பது உறவின் நாள் உடனிருப்பின் நாள். இந்த உடனிருப்பை உறவை நாமும் ஒருவர் மற்றவருக்கு வழங்கி கிறிஸ்துப் பிறப்பினை மிக மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துப் பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்....