முகமூடி மனிதர்கள்
முகமூடி அணிந்திருந்தார்கள் அவர்கள். பார்க்கவே அடி வயிறு ஆட்டம் கொண்டது. என்னை அந்த அறைக்குள் தள்ளி கதவை தாளிட்டார்கள்.
கைகளில் பயங்கர ஆயுதங்கள். என்ன நடக்கப்போகின்றதோ என்ற பீதி எனக்குள்.
என் நகைகளை எல்லாம் கழற்றி விட்டார்கள். ஒவ்வொறு நகையும் எனக்கு பிடித்த நகைகள். என் தந்தை ஆசையாசையாய் வாங்கித் தந்தது.
முகமூடி அணிந்த ஒருவர் என் அருகில் வந்து என் உடைகளை கழற்றச் சொன்னார். என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. தயக்கத்தோடு என் உடைகளை களைந்தேன். என் மானத்தை காத்துக்கொள்ள ஒரு சிறு ஆடை கொடுத்தார்கள். அள்ளி அணிந்துக்கொண்டேன். படுக்கவைத்து பல கோணங்களில் படம் எடுத்து பதிவுச்செய்தார்கள்.
காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது இவர்கள் என்னை ஒரு வழி பண்ணப்போகின்றார்கள் என்று.
முகமூடி அணிந்து வாட்டச்சாட்டமாய் இருந்த ஒருவர் என்னருகில் வந்து என்னை ஒரு ஊசியால் குத்தினார். நான் மயங்கிப்போனேன். பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.
கண்திறந்து பார்த்தேன். 'வாழ்;த்துக்கள் ! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கின்றது' என்றார் மருத்துவர் ஒருவர். என்னருகில்
கொண்டுவரப்பட்ட என் குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டேன் நான்.
மருத்துவர்கள் என் குழந்தையை மட்டும் பெற்றெடுக்க உதவவில்லை என்னையும் பெற்றெடுத்தார்கள்.
மருத்துவர்கள் என் குழந்தையை மட்டும் பெற்றெடுக்க உதவவில்லை என்னையும் பெற்றெடுத்தார்கள்.