அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

ஊனக் கண்ணிலிருந்து விடுபடு!

ஊனக் கண்ணிலிருந்து விடுபடு!

   முக்கோணத்தினுள் இருக்கும் வார்த்தைகளை வாசித்து விரைவாகச் சொல்லவும்.

   பலரும் "Paris in the Spring" என்று தான் சொல்வார்கள்.  மனிதர்களின் மூளை எப்போதுமே அவசரத்தில் செயல்படும்போது தவறு இழைக்கின்றது. நாம் ஒவ்வொரு வார்த்தையாக பகுத்து வாசித்திருந்தோமானால் தவறை தவிர்த்திருப்போம். ஆனால் அவசரத்தில் எல்லா வார்த்தைகளையும் தொகுத்துப் பார்க்கும் போது நம் மூளை பிழை ஏற்படுத்துகின்றது. நாம் நம்மைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் பல உண்மைகளும் பிறர் நம்மைப் பற்றி பகுத்து சொல்லியனவே ஆகும். எடுத்துக்காட்டாக 'உனக்குப் பேசத் தெரியாது', ' நீ ஒரு முட்டாள்,' ' உன்னால் சாதிக்க முடியாது', நீ ஒன்றுக்கும் உதவாதவன்'. நாமும் இவற்றையே உண்மை என்று நம்பி நம் ஆழ் மனதில் பதியச்செய்கின்றோம். இத்தகைய எதிர்மறை எண்ணங்களே நம் ஆளுமையை வெகுவாகப் பாதிக்கின்றன. இதனையே நாமும் நம்பி ஏற்றுக்கொள்கின்றோம். நம் மூளை நம்மைப் பற்றி தவறாக, எதிர்மறையாகப் பதியவைத்திருக்கும் எண்ணங்களைக் கட்டவிழ்ப்பு செய்வோம். நம் உண்மைத் தன்மையைக் கண்டுணர்வோம்.


பசுமைப்பூக்கள்: திரைப்படத்தைத் திறனாய்வு

பசுமைப்பூக்கள்: திரைப்படத்தைத் திறனாய்வு: திரைப்படத்தைத் திறனாய்வு திரைப்படத்தைத் திறனாய்வு செய்வதற்கான வழிமுறைகள் அ) திரைப்படத்தின் பின்புலத்தை ஆய்க 1. திரைப்படத்தின் கதாசிரி...

திரைப்படத் திறனாய்வு

 திரைப்படத் திறனாய்வு
திரைப்படத்தைத் திறனாய்வு செய்வதற்கான வழிமுறைகள்
 அ) திரைப்படத்தின் பின்புலத்தை ஆய்க
1.    திரைப்படத்தின் கதாசிரியர் யார்?
2.    எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை வேறு கதைகளிலிருந்து தழுவப்பட்டிருக்கின்றதா?
3.    இத்திரைப்படத்தின் இயக்குநர்; யார்?
4.    இந்த இயக்குநரின் பிற திரைப்படங்கள் யாவை?
5.    இவருடைய மற்ற திரைப்படங்களின் சாயல் அல்லது தழுவல் இத்திரைப்படத்தில் உள்ளதா?
6.    திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
7.    திரைப்படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் எது? அரசியல், சமயப் பின்புலம் உள்ளதா?
ஆ) திரப்படத்தின் கதைக் கருவை ஆய்க
1.    திரைப்படத்தின் மையக் கரு என்ன?
2.    திரைப்படத்தின் மையக் கரு சரியான விதத்தில் எடுத்துக்கூறப்பட்டிருக்கின்றதா?
3.    திரைப்படத்தின் கதை எந்தக் கதை வடிவத்தைக் கொண்டுள்ளது (நகைச்சுவை, காதல், சமூகம், நட்பு, குடும்பம், புலனாய்வு, இன்னும் பிற)?
4.    திரைப்படத்தின் கதைக் கரு எந்த வயதினரை அல்லது வகுப்பினரை மையப்படுத்தியது (குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர், ஊனமுற்றவர்கள், இன்னும் பிற)?
இ) திரைப்படத்தின் கதைக் களம் பற்றி ஆய்க
1.    திரைப்படத்தின் கதைக் களம் என்ன?
2.    எங்கு வைத்துத் திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது?
3.    கதையில் வரும் மக்களின் கலாச்சாரப் பண்பாட்டுச் சூழல் என்ன?
4.    கதைக் களம் கதைக்குப் பொருத்தமானதாக, தொடர்புடையதாக இருக்கின்றதா?
ஈ) திரைப்படத்தின் கதாபாத்திரங்களை ஆய்க
1.    திரைப்படத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள் உள்ளனவா?
2.    திரைப்படத்தில் உங்கள் மனதைக் கவர்ந்த கதாபாத்திரம் எது? ஏன்?
3.    யாரை திரைப்படத்திற்குத் தேவையற்ற கதாபாத்திரம் என நீங்கள் சொல்வீர்கள்?
உ) திரைப்படத்தின் வடிவமைப்பை ஆய்க
தொடக்கக் காட்சியமைப்பு
1.    திரைப்படத்தின் தலைப்பு இத்திரைப்படத்திற்கு எவ்வகையில் தொடர்புடையதாக இருக்கின்றது?
2.    திரைப்படத்தின் தொடக்கப் பெயர்ப் பட்டியல் எவ்வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. அதற்கும் திரைப்படத்திற்குமான தொடர்பு என்ன?
3.    திரைப்படத்தின் தொடக்கக் காட்சி சரியாகக் கையாளப்பட்டதா?
தொடர் காட்சியமைப்பு
4.    திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் வேறு எந்தப் படங்களிலும் பேசப்பட்டுள்ளதா?
5.    படத்தின் முக்கியமான காட்சிகள் என்று நீங்கள் எவற்றையெல்லாம் சொல்வீர்கள்?
6.    படத்தின் மேம்பாட்டிற்காகப' பயன்படுத்தப்படும் ஒலி அளவீடு என்ன? குறிப்பாகப் பதட்டம், உச்சக்கட்ட ஆபத்து, நகைச்சுவைத் தருணங்கள் முதலியன.
7.    திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம், ஒளி அளவு, சூழல் காட்சிகளில் கையாண்ட விதம் யாது?
8.    திரைப்படத்தில் கேமரா கோணங்கள் பலவிதத்தில் தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
9.    திரைப்படத்தில் வரும் பாடல் காட்சிகள் தேவையான இடத்தில் வருகின்றனவா அல்லது திணிப்பாகத் தெரிகின்றதா?
10.    மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய ஒளிப்பதிவு காட்சிகள் எவை?
11.    திரைப்படத்தில் தேவையற்றக் காட்சிகள் அல்லது வசனங்கள் அல்லது கதாபாத்திரங்கள் என எவைகளை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
இறுதி நிலை காட்சியமைப்பு
12.    திரைப்பட இறுதி காட்சியமைப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது?
13.    திரைப்படத்தின் நிறைவில் ஏதேனும் திருப்பம் நிகழ்கிறதா?
14.    இறதி காட்சியமைப்புக்கும் கதையின் மையத்திற்கும் தொடர்பு உள்ளதா?
15.    திரைபட அரங்கிலிருந்து வெளிவரும்போது உங்கள் மனநிலை உணர்வுகள் என்ன?