அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

தொடர் மின்வெட்டு… தொடரும் அரசியல் கூத்து…. Power cut in Tamilnadu




தேர்தல் வாக்குறுதிகளும் நிதர்சனமான நிஜங்களும் வேறு வேறு என்று மக்கள் இப்போது புhpந்துக்கொண்டிருப்பார்கள். 

வண்ண தொலைக்காட்சிப் பெட்டி உண்டு, மிக்சி கிரைண்டர், மின் விசிறி, மின் அடுப்பு உண்டு ஆனால் அதனை சாpயாக பயன்படுத்த மின்சாரம் இல்லை. மின் சாதன பொருட்களை கொடுக்கத் தொpந்த அரசுக்கு மின் சாரம் தங்குத் தடையின்றி கொடுக்கத் தொpவில்லை. 

நம் மின் உற்பத்தி சாலைகள் எல்லாம் பழுதடைந்துவிட்டதா? அல்லது கூடன்குளம் அணுமின்நிலையம் வந்தால் எல்லாம் சாpயாகிவிடும் என்ற மாயை விளையாட்டிற்காக பழுதாக்கப்பட்டதா?

அரசியல் விளையாட்டுகளை நிறுத்துங்கள்.

· மக்களின் தொழில் முடங்கி இன்று வியாபாரத்தில் நஷ்டம் அடைகின்றனர்.

· சிறு தொழில் செய்யும் ஏழை வணிகர்களின் தொழில் பாதிப்படைகின்றது. பெரும் பன்னாட்டு வியாபாpகள் மற்றும் தொழில் கூடங்கள் இன்று இலவச மின்சாரம் பெறுகின்றனர்.

· மோட்டார் வைத்து விவசாயம் செய்கின்ற விவசாயிகள் அவதியுறுகின்றனர்.

· தேர்வுக்காக படிக்கின்ற மாணவ மாணவிகளின் படிப்பு பாதிப்படைகின்றது.

· பச்சிளம் குழந்தைகள் தூக்கமின்றி தவிக்கின்றனர். 

· மின்சாரத்தையே நம்பியிருக்கும் நாகாpக நடுத்தர வர்க்கம் இன்று அவதியுறுகின்றது.

· கொசுக்கடி தாங்கமுடியாமல் தூக்கம் கெட்டு தமிழகமே தவிக்கின்றது.

அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து உங்கள் அரசியல் விளையாட்டுகளை தேர்தல் காலம் வரையாவது ஒதுக்கிவையுங்கள். பிழீஸ்… 

ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்; Eunuch as Bishop




உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். பெண்களையே இரண்டாந்தரமாக பார்த்து பழகிப்போன சமூகத்தில் ஒரு திருநங்கையை ஆயர் நிலைக்கு உயர்த்தியிருக்கும் தென்னிற்திய திருச்சபையை பாராட்டுகின்றோம். 

மதங்களின் போர்வையில் பெண்களை சபிக்கப்பட்டவர்களாகவும் கோயிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களாகவும் பார்த்த சமூகம் இனி பொண்களை அதுவும் குறிப்பாக திருநங்கையர்களையும் மாண்போடு பார்க்கும் பார்வை பாராட்டுக்குறியது.

பெண்களை தெய்வமாக கோயிலுக்குள் வைத்து பு+ஜிக்கும் மதங்கள் பெண்களை அர்ச்சகராக மறைபோதகராக ஏற்றுக்கொள்ளாதது சமயத்தையே சந்தேகப்பட வைக்கின்றது.


கதிர் வீச்சு மதங்களை பார்த்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை


கதிர் வீச்சு மதங்களை பார்த்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை


கூடன்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு இப்போது அடுத்தக்கட்ட போரட்ட களத்தை நிர்னயத்திருக்கின்றது. இலைமறைக்காயாக பார்பனிய ஆதிக்கத்தை முன்னிருத்திய இந்து முன்னனி கட்சிகள் இன்று விஸ்வ ரூபம் எடுத்து மக்கள் போராட்டத்திற்கு மதச்சாயம் புசி போராட்டக்காரர்களை ஒடுக்கத் துணிகின்றனர். 

அணு கதிர் வீச்சு மதங்களை பார்த்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அணு உலை வெடித்து சிதறினால் எந்த மதம் இவன் என்று பார்த்து அழிப்பதில்லை.

மக்கள் போராட்டத்தை முன்வைக்கும் போது எப்படியெல்லாம் மதக் கலவரத்தை தூண்டி போராட்டத்தை ஒடுக்கலாம் என்ற மதவாதிகளின் எண்ணம் நிறைவேராது.