அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....
Search This Blog
குள்ளநரிக்கூட்டம்
மாணவர் எழுச்சி என்பது இன்று சுயநல அரசியல் அமைப்புகளை அதிர்ந்துப்போய் நிற்க செய்திருக்கின்றது.
தமிழ் ஈழம் என்ற சொல்லை சொல்லாமல் அரசியல் பேசிய அரசியல் தலைவர்களின் குள்ள நரி தந்திரம் இன்று உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கின்றது.
மாணவர்களின் எழுச்சி என்பது அவர்கள் இன்னும் கறைபடுத்தப்டாமலே இருக்கின்றார்கள் என்பதை பறைசாற்றுகின்றது.
இந்த மாணவர்களின் எழுச்சி அலை எளிதில் ஓயாது.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு உழைக்காத அல்லது அதைப்பற்றி பேசாத எந்த அமைப்பும், அரசியல் கட்சியும் குள்ளநரிக்கூட்டம் தான்...
மாணவச் சமூகம் வாழ்க!
.jpg)
மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டம் ஓங்கி ஒலிக்க வாழ்த்துவோம்.
ராஜபக்சேக்கு தான் வெளிச்சம்..
ராஜபக்சேக்கு தான் வெளிச்சம்..
பாராளுமன்றத்தில் ஒத்தக்கருத்துடைய தமிழர்களாய் இலங்கைக்கு எதிரான தனது கருத்தை பதிவுச்செய்வதை விட்டு விட்டு அங்கேயும் சென்று ஒருவர் செய்த தவற்றை மற்றவர் சுட்டிக்காட்டும் அரசியல் அவலத்தை நம் அரசியல் கட்சியினர் என்று தான் நிறுத்தப்போகின்றார்களோ.
இலங்கையில் இன்று இந்த அவலத்திற்கு காரணம் நம் அரசியல் கட்சியினர் ஒத்தக்கருத்துடையவராக இல்லாதது தான் என்பது நம் ஆட்களுக்கு என்று தான் புரியப்போகின்றதோ. அல்லது புரியாதது போன்று நடித்து இலங்கைத்தமிழர்கள் இன்னும் எத்தனை பேரை கொல்லப்போகின்றார்களோ...
அந்த ராஜபக்சேக்கு தான் வெளிச்சம்..
Subscribe to:
Posts (Atom)