.jpg)
திரைப்பட நடிகர்களுக்கும், போதை பழக்கத்துக்கும் நம் மாணவச்சமூகம் அடிமைப்பட்டு சமூகப்பற்று இல்லாமல் இருக்கின்றார்களே என்ற வருத்தமும் ஏமாற்றமும் சமூக சிந்தனையாளர்களின் மனதில் காயத்தை ஏற்படுத்தியிருந்த தருணத்தில் ஈழத்தமிழர்களுக்கு உலகளவில் ஈழம் அமைய ஆதரவு பெருக வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டு வரும் இலங்கை ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் நம் மாணவர்கள் புதிய எழுச்சியோடு களம் கண்டிருப்பது நமக்கு நம்பிக்கையையும் புதிய தலைமுறையினருக்கு மேல் நல் மதிப்பையும் பெருகச்செய்திருக்கின்றது. மாணவச் சமூகம் வாழ்க!
மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டம் ஓங்கி ஒலிக்க வாழ்த்துவோம்.