'நான் மக்களோடு இருப்பேன்' யாரோ எங்கோ சொன்னது போல் இருக்கின்றது. ஆனால் மக்களுக்கான அரசு மக்களுக்கு எதிராக செயல்படுவதேன்.
வீட்டை விட்டு இந்த இரவில், குளிரில் போராடக்கூடிய மக்களின் உணர்வுக்கு செவிகொடுக்காமல் மந்தசெவியுடைய அரசின் போக்கை வன்மையாக கண்டிப்போம்.
தடியடியை மார்பில் வாங்கிய போராடிய மக்களின் வலிகளில் பங்கெடுப்போம்.
துப்பாக்கிச்சூட்டில் பலியான சகோதருக்கும் போராட்டத்தில் கொல்லப்பட்ட குழந்தைக்கும் வீரவணக்கம் செய்வோம்.
அரசினுடைய 'மாயவலை வார்த்தைகளுக்கு' அடிபணியாமலிருப்போம்.
வாக்கு வங்கி அரசு, ஊழல் அரசின் போக்கை வன்மையாக கண்டிப்போம்.
மக்களுக்கு எதிரான அரசின் வீழ்ச்சியை எதிர்பார்ப்போம்.