அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

ஆசிரியர்களின் நிலைமை



சில தினங்களுக்கு முன்பாக ஆசிரியருக்கான தகுதி தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு எழுதிய 6,00,000 பேரில் 2448 பேர் மட்டும் தேர்ச்சிபெற்றிருக்கின்றார்கள் என்ற செய்தி ஆசிரியர்களின் தகுதியையே தோலுரித்துக் காட்டுவதாக தெரிந்தது. 

சமூகத்தில் எஞ்சியிருக்கின்ற நல்லவர்களும் வல்லவர்களும் மருத்துவம், பொறியியல் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்க எஞ்சிய அல்லது எதுவுக்கும் தேராது என்று புறம்தள்ளப்பட்ட ஒரு சிலரே ஆசிரிய பணிக்கு தற்போது விண்ணப்பிக்கின்றார்கள் என்று புலப்படுகின்றது.

ஏட்டறிவித்தவன் இறைவன் ஆவான் என்று கூறி ஆசிரியர்களை தோள்மீது வைத்து கொண்டாடிய காலம் மாறி ஆசிரியர்களின் இன்றைய நிலையை இந்த தகுதி தேர்வு வெளிப்படுத்துகின்றது.

புதிய தலைமுறையினரை உருவாக்குகின்ற ஆசிரியர்களின் நிலைமை இப்படியிருக்க புதிய தலைமுறை இனிமேல் எப்படியிருக்கும்?