அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

'மாற்றம் தேடும் இளையோர்', Youth; lovers of change


'மாற்றம் தேடும் இளையோர்'

உருவமற்ற கோடுகள் ஓவியரின் தூரிகை படப்பட ஓவியங்களாகின்றன. மாற்றம்  வேண்டும் என்று கனவுக் காணும் இளையோருக்கு கனவு என்பது தூங்கும் போது வருவதல்ல தூங்க விடாமல் செய்வதே கனவு. இத்தகைய கனவுகளும் கற்பனைகளும் தான் இளைய இந்தியாவை மாற்றப்போகின்றன.
ஒரு குடிசையுள் படுத்துக் கொண்டு விறகு வெட்டியின் மகன் கண்ட வெள்ளை மாளிகைக் கனவுத் தான் ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க நாட்டு அதிபராக்கியது.

இந்திய நாட்டின் சாம்பிராணியைக் கப்பலில் அள்ளி வர வேண்டுமென்ற மாசிடோனிய இளைஞனின் கனவுதான் உலகை வென்ற மாவீரன் அலெக்சாண்டர் ஆக்கியது.

    இந்திய விடுதலையை புரட்சி வழியில் அடைய வேண்டும் என்ற கனவில் உதயமான இளைஞனே பகத் சிங்.

    இவ்வாறு கனவுகள் இளையோருக்குள் மாற்றத்தையும் இளையோரால் சமூக அரசியல், பொருளாதார, சட்ட, சமய துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருகின்றது.

    இளைஞன் என்பவன் எல்லையற்ற ஆற்றல்களின் ஊற்று. கணக்கி;ட முடியாத திறமைகளின் புதையல். நமது நாட்டில் மூன்றில் இரண்டு பகுதி இளையோர் உள்ளனர். எனவே திறமையும் அணுவை விட பேராற்றலும் கொண்ட நமது நாட்டை 'இளைய இந்தியா என்று சொல்வதில் தவறில்லை.

    'லஞ்சம் வாங்கினேன் கைதுசெய்தார்கள் லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள.;' நமது நாட்டில் சட்ட ஒழுங்கு சாமாநிய மனிதர்களுக்கு எதிராகவே உள்ளது. போபால் விச வாய்வு கசிவில் குற்றம் சாட்டப்பட்ட ஆன்றர்சன் முதல் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மாட்டிக்கொண்ட முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு ராசா வரை சட்டத்தின் பிடியிலிருந்து எழிதில் தப்பிக்கொண்டவர்கள். எனவே தான் இளைஞன் ஒருவன் எழுதினான், சட்டம் என்பது ஒரு சிலந்தி வலையைப்போன்றது. பெரிய பெரிய வண்டுகள் வலையை கிழித்துக்கொண்டு தப்பி விடுகின்றன. சிறிய பூச்சிகள் மட்டும் பரிதாபமாக மாட்டிக்கொள்கின்றன.

    எனவே மாற்றத்தை நேசிக்கும் இளைஞன் சட்டத்துறையில் கால் பதி;த்து அரசியல் சாசனம் வகுத்துக்கொடுக்கும் உரிமைகளை மக்கள் தடையின்றிபெற்று மாண்போடு வாழ இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.

    ஒளிர்கின்றது இந்தியா என்றார்கள். ஆனால் இன்று விலைவாசி உயர்வால,; கோடிக்கணக்கான ரூபாய் ஊழலால் பாமர மக்களின் வயிறு தான் பற்றி எரிகின்றது. இந்திய பொருளாதாரத்தில் ஒவ்வொரு இளைஞனின் வியர்வையும் உழைப்பும் உண்டு. இளைஞர்களுக்காக இளைஞர்களால் வளர்க்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் பெருச்சாளிகளுக்கு எதிராக மாற்று பொருளாதார கோட்பாட்டினை வரையறுத்து ஏழைகளே இல்லாத இந்தியா மலர்ந்திட இளைய சமூதாயம் உறுதிப்பூண்டிட வேண்டும்.

     அரசியல் என்ற மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்களின் உரிமைகளையும் உடமைகளையும் கூறுப்போட்டு விற்று ஏப்பம் விடும் அரசியல் வித்தகர்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கவும் அரசியல் களத்தில் மாற்றம் கொண்டு வரவும் இளையோர் பெருந்திரளாக அரசியல் களம் காண வேண்டும்.

    அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தப்போது இந்தியாவில் சிறைச்சாலைகள் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகோ இந்தியாவே ஒரு சிறைச் சாலையாகிவிட்டது.

    இச்சிறைச் சாலைகளிலிருந்து இந்திய மக்களை விடுவிக்க பிறந்தவர்கள் இறையோரே. என்று மாற்றம் வரும் என்று விம்மி வாடும் கோடிக்கணக்கான மக்களை விடியலின் வாசலில் கொண்டு வரும் பெரும் பணி இன்றைய இளையோரதே.

    வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்றிருப்போமானால்  அதனை மண்ணும் செய்யும் மரமும் செய்யும்;. மாற்றம் நேசிக்கும் இளைஞனே மாற்றமானால் இனி இளையோருக்கு ஏமாற்றம் என்பது இல்லை.

    வாழ்க்கை என்பது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை. வீழ்ந்துக் கிடந்தால் இளைஞனே உன்னை சிலந்தியும் சிறைவைக்கும். நீ எழுந்து நின்றால் உலகமே உனக்கு தலைவணங்கும்.