அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

பிளவுப்படாத நெஞ்சத்தினராய் வாழ, To live with undivided heart

பிளவுப்படாத நெஞ்சத்தினராய் வாழ 

கல்லெறி விழா கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர எல்லைப்பகுதியில் பந்துர்னா என்ற கிராமத்தில் இவ்விழா சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுகின்றது. இப்பகுதியில் ஜாம் நதி என்ற ஒரு நதி இருக்கின்றது இந்த நதியின் இவ்விழாவின் போது இரு கரையிலும் மக்கள் திரளாக கூடிவருவர். கற்கள் வண்டி வண்டியாக குவிக்கப்படும். மது பானங்கள் விற்பனை சூடு பிடிக்கும். மேள தாளங்கள் முழங்க கல்லெறி விழா ஆரம்பமாகும். இரு பக்கங்களிலிருந்தும் மக்கள் கற்களை வீசி எறிவர். கற்கள் காயங்களை ஏற்படுத்தும் காயங்கள் சாமி கொடுத்த வரங்களாக பார்க்கப்படும். இரத்தம் வழிய வழிய மக்கள் விழா கொண்டாடுவர்.
இத்தகைய விழாக்கள் தமிழ் நாட்டிலும் கொண்டாடப்படுகின்றன. சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் போது ஒருவருக்கொருவர் இரத்தத்தால் திலகமிட்டுக் கொண்டனர். சூலாயிதம், ஈட்டி, கம்பு கட்டைகள் என்று ஆயுதங்களுடன் களமிரங்கிய கூட்டம் ஒருவர் ஒருவரை தாக்கி விழா கொண்டாடினர்.
இத்தகைய விழாக்கள் இன்று பல ஊர்களில் சாதி கலவரங்களாக, மத கலவரங்களாக, கோஷ்டி பூசல்களாக அரங்கேறுகின்றன. நாம் நம்மை பிளவுப்படுத்தி விட்டோம். பிளவுகள் நம்மை காயப்படுத்துகின்றன, நம் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன, நம் மாண்பை கறைப்படுத்துகின்றன.