அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

தமிழக மீனவர்களுக்காக செவிடர்களின் காதில் மீண்டும் ஒரு கதறல்

தமிழக மீனவர்களுக்காக செவிடர்களின் காதில் மீண்டும் ஒரு கதறல்


தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழக மீனவர்கள் இன்று கொன்றழிக்கப்படுவதை தினம் தினம் நாம் பார்க்கின்றோம்.
பல நூறு கண்துடைப்பு கடிதங்கள் எழுதினப்பிறகும், பல தரப்பட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பிறகும் தமிழ் மீனவர்களின் வாழ்வில் மாற்றம் ஒன்றும் இல்லை. கடந்த பத்து நாட்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நமக்காக பேச நாதியில்லை...
நாம் நம்பியவர்கள் நம்மை கைவிட்டு விட்டனர்...
பத்து நாள்களுக்கு முன்பு நாகையை சார்ந்த வீரபாண்டியன்,
நேற்று புஷ்பவனத்தை சேர்ந்த ஜெயக்குமார்....
நாளை நீயும் நானும்...
நமக்காக பேச ஆளில்லை....
நமக்காக போராட யாருமில்லை...
அடுத்தவனை நம்பி ஏமாந்த காலம் போதும்...
தமிழா நீ வாழப் பிறந்தவன்...
ஆளப்பிறந்தவன்....
இன்று வாழ்க்கையும் நம்கையில் இல்லை
ஆட்சியும் நம்கையில் இல்லை
பிளவுகள் போக்கி தமிழனாய் நிமிர்ந்து நில்
புறப்;படு ...
படையெடு....
புரட்சி செய்...
விடுதலையின் விழுதுகள் நீயானால்
விடியலில் நம் கனவு நனவாகுமே...