Small is Powerful
உலகில் பெருத்துப்போன அதி பயங்கரமான, கொடுரமான மிருகங்கள் எல்லாம் அழிந்துப்போயின. ஆனால் சிறிய தேவையற்றவை என உலகம் கருதிய பூச்சிகள், வண்டுகள், நுண்ணுயிரிகள் இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம் அவைகளின் ஆற்றலும் சூழலுக்கேற்ப அதன் வளைந்துக் கொடுக்கும் சக்தியுமே ஆகும்.
உலக பரிணாமத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் இத்தகைய நுண்ணுயிரிகள், புளு பூச்சிகளின் பங்கேற்பு மிக பெரியது.
என்று இத்தகைய நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றனவோ அன்றே தொடங்கிவிட்டது உலகின் அழிவு என்று நாம் கண்டிப்பாக சொல்ல முடியும்.
இறந்த பிராணிகளை தின்று இடத்தை சுத்தப்படுத்துவது நுண்ணுயிரிகள். ஒரு முத்திய பழத்தை, விழுந்த இலையை அழுகச்செய்து உரமாக்;குவதும் இந்த நுண்ணுயிர்களே..
மண்ணுக்கு உயிர்சத்தை கொடுப்பது இந்த நுண்ணுயிர்களே.
ஒன்றுக்கு மற்றொன்று இரையாவதும் இதனால் உயிர் தளைக்க செய்வதும் இந்த நுண்ணுயிரினாலேயே.
உலகில் நுண்ணுயிர் இல்லையென்றால் கனவிலும் நாம் வாழ முடியாது.
பூச்சிகளை கொல்லுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துக்களை தெளிக்கின்ற போது உணவை நஞ்சாக்குவது மட்டும் அல்ல பல கோடி நுண்ணுயிர்களையும் சேர்த்தே நாம் கொலை செய்கின்றறோம்.
சின்ன பூச்சிகளில் இருக்கும் அதிசயத்தை, பயன்பாட்டை கண்டு வாழ்கை தத்துவத்தை புரிந்துக்கொள்ள முடியும்.
இன்று யானையின் சக்தியே உயர்ந்தது என்று சொல்லுகின்ற மனநிலை போய் சிறு புளு பூச்சிகளின் சக்தியே அதிசயதக்கது, அளபெரியது என்று விஞ்ஞான உலகமே அதிசயித்து நிற்கின்றது.
ஆளை, மூளை பார்த்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எடைபோட்டு ஏமாந்து போகாதே, ஏழ்மை, எளிமை அனுபவித்து உலகின் ஆன்மீகம் அறிந்துக்கொள்.