அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Competition, போட்டி

போட்டி


உலகம் முண்டியடித்துக் கொண்டு முன்னேறுகின்றது. முன்னேற்றம் 40 சதவீதம் இருக்க அது விட்டுச் செல்லும் கழிவுகள் 60 சதவீதம் உள்ளது.

மனிதன் காலையில் எழும்பி கழிவறையை பிடிப்பதிலிருந்து, பேருந்தை பிடிப்பது வரை பேருந்தில் இடம்பிடிப்பதிலிருந்து, பேரூந்திலிருந்து இரங்குவது வரை, அலுவலக வேலையிலிருந்து அரைவயிறு சாப்பாடு வரை, பள்ளிக்கூட படிப்பிலிருந்து பணி உயர்வு பெறுவது வரை, முண்டியடித்து பிறப்பதிலிருந்து முக்கி மோதி முன்னேருவதிலிருந்து, முடங்கிப்போய் விழுவதுவரை மனிதன் காலத்துடனும், கலாச்சாரத்துடனும், ஒருவன் மற்றவனுடனும் போட்டி போட்டுக்கொண்டே இருக்கின்றான், இறக்கின்றான்.

'போட்டி இல்லா உலகம்' எனும் கண்ணோட்டம் இந்நிலையிலும் சாத்தியமா என்பது பலரின் கேள்வி சாத்தியமில்லை என்பதுதான் எனது பதில். உண்மையிலேயே போட்டி உழஅpநவவைழைn என்ற சொல்லின் பொருள் உணர்ந்தால் நீங்களும் போட்டி வேண்டும் என்று தான் சொல்வீர்கள்.

"Competition" என்னும் ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல் இலத்தீன் வார்த்தையான 'Con Petire; என்பதாகும். இச்சொல்லின் பொருளை கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். 'Con Petre' என்னும் சொல்லின் பொருள் ஒன்றாகத் தேடுவது (to search together). ஒருவன் மற்றொருவனை அடித்துக் கொண்டு, கழுத்தை அறுத்துக் கொண்டு முன்னேறுவது அல்ல. மாறாக ஒன்றாக வளர்ச்சியை எட்டுவது. ஒருமனதாக முழுமையை தேடுவது. பந்தயத்தில் பிறரை தள்ளிப் போட்டுக்கொண்டு ஓடுவது அல்ல. விழுந்தவனையும் தூக்கிவிட்டுவி;ட்டு அவனுடன் சேர்ந்து ஓடி வெற்றி பெறுவது.

இத்தகைய போட்டி மனப்பான்மை நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

என்ன, போட்டிப்போட நான் தயார். நீங்கள் தயாரா...?