அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

10 rupees note, பத்து ரூபாய் நோட்டு

பத்து ரூபாய் நோட்டு

         மனிதர்கள் பல வகை உண்டு. ஒங்வொருவரும் அவரவர் செயல்களிலிருந்து அறிந்துக்கொள்ளப்படுவர். கொடுத்தல் என்பது மனித செயல்பாடுகளில் ஒன்று. சிலர் தங்களிடமிருந்து சிலவற்றை பிறருக்கு கொடுப்பர். வேறு சிலர் தனக்கு போக மீதமிருப்பதை இல்லாருக்கு கொடுப்பர். மற்றும் சிலர் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கூட கொடுத்து விடுவர். இவ்வாறு கொடுப்பது என்பது பல நிலைகளில் புரிந்துக்கொள்ளப்படும்.



ஒரு முறை சிறைப்பணிக்காக ஆலயம் ஒன்றின் முன்பாக நின்றுக்கொண்டு தட்டு ஏந்தி காணிக்கை (பிச்சை) வாங்கிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு போட்டியாக நிரந்தர பிச்சைக்காரர்களும் எங்கள் வரிசையில் உண்டு;. தட்டு ஏந்தி நிற்பதற்கு வெட்கமாகவே இருந்தது. போவோர் வருவோர் எங்களையே மேலும் கீழுமாகப் பார்ப்பது மிகுந்த தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆயினும் ஓர் உயர்ந்த பணிக்காக இது ஒன்றும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திடவில்லை.



திருப்பலி முடிந்ததும் ஆயத்திலிருந்து வெளியே வருவோர் எங்கள் தட்டுகளை ஐம்பதும் நூறுமாக நிறைத்தனர். எனினும் அவரவர் மனதாழத்திற்கேற்ப தங்கள் காணிக்கையினை கொடுத்தனர். சிலரின் உடைகள் பளபளத்தாலும் உள்ளம் காணிக்கை போடுவதற்து தயாராக இல்லாமலே இருந்தது. காரில் வந்தர்கள் கூட காணாததுப் போல் சென்றனர்.



பாவம் ஞாயிறு தோறும் பிச்சைக்காகவே வரும் பிச்சைக்காரர்களுக்கு எங்களால் பெரும் இழப்பு ஏற்பட்டது. சில பிச்சைக்காரர்கள் எங்களையே வெறித்துப் பார்த்தனர். சிலர் விரக்தியில் விம்முவது காலை வெளிச்சத்தில் தெளிவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர் கூட்டத்திலிருந்த கந்தல் ஆடை உடுத்திருந்த பிச்சைக்கார பெண் ஒருவர் எழுந்து வந்து என்னருகில் தயக்கத்துடன் வந்தார். பலர் காசினை தட்டினில் போடுவதும் போவதுமாக இருந்தனர். தாழ்வுமனப்பான்மையால் கூனிக்கறுகி வந்த இப்பிச்சைக்காரப் பெண் தன் ஆடையின் நுணியில் கட்டி வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டு ஒன்றினை எடுத்து என் தட்டில் போட்டுக்கொண்டு தன் இடத்தில் சென்று வேகவேகமாக அமர்ந்துக்கொண்டார்.



பிச்சை எடுக்கின்றோமே என்று வெட்கி குனிந்த என் மனம் பிச்சைப்போட்ட பிச்சைக்காரியின் உயர்ந்த மனம் கண்டு நிமிர்ந்து நின்றது.