அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

The Sound of Justice, நீதியின் சத்தம்

நீதியின் சத்தம்

        கருப்புச்சாமி வாழ்க்கையின் விழிம்பில் வாழ்பவன். தினம் தினம் மாடாய் உழைத்தால் தான் வயிற்றை நிரப்ப முடியும். திருமணம், மனைவி, மக்கள் என்றானப்பிறகு அதிக நேரம் உழகை;கவேண்டிய கட்டாயம். பணத்தேவை அதிகமானப்போது உரிய வேலை கிடைக்கவில்லை. விலைவாசி நாளுக்குநாள் மலைப்போல உயர்ந்துக்கிட்டேப்போகுது. கிடைக்கிற கூலிய வைச்சி புள்ளைகள எப்படி கரைச்சேர்க்கிறது.

கருப்புச்சாமி எந்த காரியம் செய்ய வந்தாலும் அது உருப்படாமதான் போச்சு. ஊழல், லஞ்சம் கலாச்சாரத்துல அவனால போட்டிப்போட்டுக்கிட்டு வாழமுடியல. காய்கறி வியபாரம் தொடங்கினான் அவன் முன்னாலேயே பெரிய சூப்பர் மார்க்கட் வந்து அவன் பொளைப்ப கெடுத்தது. கடனக்கிடன வாங்கி பொட்டிக்கட வைச்சி பொளச்சிக்கலாம்னு பார்த்தான். மாமூல் கேட்டு போலீசு காரனுவ தொந்தரவு தாங்க முடியல. பி;ள்ளைங்க பட்டினியிலயும், பன்றிக் காய்ச்சலுலேயும் சாவுதுங்க. கடன் காரன் கழுத்தை நெறிக்கிறான்.

கருப்புச்சாமி விரக்தியின் உச்சத்துல, டாஸ்மார்க் மப்புல, ரோட்டு மத்தியில நின்னுக்கிட்டு, 'நாய் பொழைப்புடா இது' னு கத்தினான். நடு ரோட்டுல நின்னுக்கிட்டு நாலு பேறு பாக்கிறது மாதிரி கூச்சல் கும்மாளம் போட்டுக்கிட்டு இருந்தான். போலீசு காரனுவ வந்தானுவ. நாலு சாத்து லத்தி கம்பால சாத்தினானுவ. வலி பொறுக்காம வாய்க்கு வந்தது போல உளறி தள்ளினான் கருப்புச்சாமி;. போலீசு கார பையலுங்க அப்படியே கருப்புச்சாமிய மாமியார் வீட்டுக்கு அள்ளிக்கிட்டு போயிட்டானுங்க.

கருப்புச்சாமிக்கு சுய உணர்வு வந்தப்போது கம்பிக்கு பின்னாடி கிடந்தான். நீதி மன்றம் அவனுக்கு 500 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. கருப்புச்சாமிக்கு ஒன்றுமே புரியல. ஏன் னு கேட்டது தப்பா? நீதிமன்றம் அவன் கைகள், கால்கள் மற்றும் தலையை வெட்டிப்போட தீர்ப்பளித்தது.

கைகள், கால்கள் மற்றும் தலை வெட்டப்பட்டு கருப்புச்சாமி நான்கு சுவற்றுக்குள் உயிரோடு கிடந்தான். தன் உடலை உருளச்செய்;து மீண்டும் மீண்டுமாக சிறைச் சுவற்றை மோதினான். ஒங்வொறு முறையும் அவன் சிறைச் சுவரை மோதும் போதும் பெரும் சத்தம் உருவானது.

ஒவ்வொறு முறையும் இச்சத்தம் கேட்கும் போது அரசியல் வாதிகளுக்கு நடுக்கம் ஏற்ப்பட்டது. பெறும் பணமுதலையர் அச்சமடைந்தனர். அரசு அதிகாரிகளின் உள்ளத்தில் உளி இறங்கியது. கருப்புச்சாமி சுவற்றில் மோதுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. இதனால் நீதிக்கான சத்தமும் நிற்காமல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.