அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Celebrate the failures, தோல்வியை கொண்டாடுவோம்

தோல்வியை கொண்டாடுவோம்

        வெற்றிப் பெற்ற மனிதர்களையே தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் சமூகம் இது. தோல்வி கண்ட மனிதர்களை மனிதர்கள் நிலையிலிருந்து அன்னியப்படுத்தி இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்றுக் கருதும் ஊனச்சமூகத்தில் ஊமையாய் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் நாம். வெற்றி போன்று தோல்வியும் ஒரு நிரந்திர நிலையன்று என்பதை நாம் மறந்துப்போய் விட்டோம்.

மேல்நிலைத் தேர்வில் மாநிலத்தில், மாவட்டத்தில், பள்;ளியில் முதல் மதிப்பெண் பெறுகின்ற மாணவ மாணவர்களே மனித அறிவின் ஆளுனர்கள் என்று போற்றப்படுகின்றனர். மனனம் செய்து ஒப்புவிக்கும் மனநிலையே இன்று அறிவாற்றல் என்று போற்றப்படுகின்றதேயன்றி மற்றத் திறமைகள், படைப்பாற்றல்கள் எல்லாம் அறிவாற்றல்கள் என்று பார்க்கப்படாததே மனிதக்குல வளர்ச்சியின் தடைக்கற்கள். இதனாலயே மாற்றுத்திறன் வாய்ந்தவர்கள், படைப்பற்றல் கொண்டவர்கள், இன்னும் வேறு பல திறமைகள் கொண்டவர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்று கருதப்படுவதனாலேயே மாணவ மாணவிகளுக்கிடையே தற்கொலை எண்ணம் அதிகரிக்கின்றது, தற்கொலையும் செய்துக் கொள்கின்றனர்.

இன்றைய சமூகத்தில் வெற்றி கொண்டாடப்;படுவதுப் போன்று தோல்வியும் கொண்டாடப்படவேண்டியது. தோல்வி மனிதனுக்கு ஒவ்வாத ஒன்றல்ல மாறாக மனித ஆளுமையை வளர்த்தெடுப்பது. தோல்வியே மனிதனின் வளர்சியற்ற பகுதிகளை பகுப்பாய்வுச்செய்து பண்படையச்செய்யும். தோல்வியே மனிதனை அவரவர் தகுதிகளுக்கேற்ப புரிந்துக்கொள்ளும். தோல்வி கண்டவர்களே வளர்ச்சியடைகின்றனர், வளரச்செய்கின்றனர். வாழ்க்கையில் தோல்வி பெறாத மனிதர்கள் மகாத்மாக்களாக, சாதனையாளர்களாக வாழ்ந்ததில்லை.

தோல்வியடைந்துவிட்டீர்களா ! கவலை வேண்டாம். மகாத்மாக்களாக வாழ தோல்வியை கொண்டாட பழகிக்கொள்ளுங்கள். வாழ்க்கை உங்களை கொண்டாடும் நேரம் வெகு தொலைவில் இல்லை.