அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Prayer இறை வேண்டல்

இறை வேண்டல்

     மனிதன் பரிணாம வளர்ச்சி பெறுவது போன்று அவன் செபிக்கும் முறையும் பரிணாம வளர்ச்சி பெறுகின்றது.

குழந்தையாய் இருக்கும்போது நடை பழக வேண்டுமென்றால் மூன்று சக்கர கை வண்டி ஒன்று தேவைப்பட்டது. நடக்க பழகினப் பிறகும் கைவண்டிதான் வேண்டும் என்று எவரும் அடம்பிடிப்பதில்லை.
அதேபோன்று குழந்தையாய் இருக்கும்போது பிறர் சொல்லிக் கொடுத்த அல்லது பிறர் அனுபவத்திலிருந்து எழுதிய செப முறைகள் நமக்கு தேவைப்பட்டன. நாமும் உன்னிப்பாய் எழுத்தின் பொருள் புரியாத போதும் பிழையின்றி வாசித்து செபித்தோம்.
நான் பள்ளி பருவ மாணவனாய் இருந்தபோது நானாக எனக்கு வேண்டியவற்றை கடவுளிடம் மன்றாடினேன். ஏனெனில் கடவுள் கேட்பதை எல்லாம் தருவார் என்று எண்ணினேன். பரிட்சையில் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். இன்று குறிப்பிட்ட வாத்தியார் பள்ளிக்கு வரக்கூடாது... இப்படி பல.
கல்லூரிக்கு வந்தபிறகு இறைவேண்டலில் சற்று மாறுபட்டேன். கடவுள் ஏற்கெனவே பல நற்கொடைகளினால் வளர்ச்சிபெற செய்திருக்கின்றார். இன்னும் என்ன கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் என கேட்பது. பேசாமல் அவர் அருளிய கொடைகளுக்காக நன்றியும், புகழ்ச்சியும் மட்டும் செய்தால் போதும் என்று முடிவெடுத்தேன்.
இறையியல் பயின்ற நாட்களில் மீண்டும் இறை வேண்டலுக்கு பற்பல அர்த்தங்களும் செப முறைகளும் கற்றுக்கொண்டேன். இறை வேண்டல் என்பது, கடவுளுடன் உரையாடல், உறவாடல், உணர்ந்திருத்தல், சும்மா இருத்தல், சிக்கென பற்றிக் கொள்ளுதல், பரவசமடைதல், பசித்திருத்தல், அன்பு செய்தல், கடவுளை தியானித்தல், இப்படியாக இன்னும் பல.
என்னதான் இறைவேண்டலுக்கு அர்த்தங்கள் ஆன்மீகங்கள் ஆயிரம் இருந்தாலும் இன்று எனக்கு இறைவேண்டல் என்பது இறை/மக்களோடு உடனிருப்பதே.