அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Law, சட்டம்

சட்டம்

“லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்

லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்”

என்று இன்றைய சட்டத்தின் அவலநிலையை, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் புது கவிஞன் ஒருவர். சட்டம் என்பது ஒரு சிலந்தி வலையைப் போன்றது. பெரிய பெரிய வண்டுகள் எல்லாம் அதனை கிழித்துக் கொண்டு தப்பி விடுகின்றது. ஆனால் சிறிய சிறிய பூச்சிகளோ அதில் மாட்டிக் கொள்கின்றது. பணம் படைத்தவர்களும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் சட்டத்தை ஏழைகளை வதைக்கும் சாட்டையாக பயன் படுத்துகின்றனர். சர்வதிகாரம் செய்ய விரும்புகின்றவர்களுக்கு சட்டமே முதல் ஆயுதமாக உள்ளது. எனவே தான் மக்கள் சார்பாக குரல் எழுப்புபவர்களை தாட, மிசா, போடா என்ற பெயரில் கைது செய்து வாய்மையின் வாயினை அடைக்கின்றனர்.

காற்றிற்கு கைவிலங்கு போடும் சமூகத்தில் வாய்மையே வெல்லும் என்ற நீதிமன்ற வாசகங்களுக்கும், கண்ணைக் கட்டிக் கொண்டு தராசை பிடித்துக் கொண்டு நிற்;கும் நீதி தேவதைக்கும் பொருள் இல்லாமல் போகின்றது. காக்கிச் சட்டையும் கருப்பு சட்டையும் தங்கள் ஆடைகளை கழற்றி வைத்து விட்டு எந்த கட்சி ஆளுகினறதோ அக் கட்சியின் கொடி வண்ணத்திலேயே சட்டை செய்து போட்டுக் கொள்ளுகின்றனர்.

நிலமை இப்படி இருக்க சட்டம் என்றச் சொல் வீட்டு சன்னல் கதவை மட்டும் குறிக்கும் சொல்லாகவே இருந்துவிடும்; நிலை உருவாகின்றது.